புதிய அவதாரம் எடுக்கவுள்ள ஹஷிம் அம்லா

76

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான  ஹஷிம் அம்லா, கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுக்கின்றார். 

அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அண்மையில் ஓய்வினை அறிவித்த ஹஷிம் அம்லா, தென்னாபிரிக்காவின் MSL T20 தொடரில் ஆடும் கேப் டவுன் பிளிட்ஸ் அணிக்கு துடுப்பாட்ட ஆலோசகராக செயற்படுவதன் மூலமே புதிய பயிற்சியாளராக அவதாரம் எடுக்கின்றார். 

டி-20 உலகக் கிண்ண ஆரம்ப கட்டம் இலங்கைக்கு எவ்வாறு இருக்கும்?

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 16 நாட்கள், 51 போட்டிகளுக்கு பின் 2020 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான உலகத்…

MSL T20 தொடர் இந்த மாதம் 08ஆம் திகதி ஆரம்பமாகின்றது. எனினும், இந்த தொடரில் பயிற்சியாளராக கடமைகளை பொறுப்பேற்க முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள T10 லீக் கிரிக்கெட் தொடரில், கர்நாடாக டஸ்கர்ஸ் அணிக்கும் ஹஷிம் அம்லா தலைவராக செயற்படவுள்ளார். அதனால், MSL T20 தொடரில் இம்மாதம் 25ஆம் திகதிக்குப் பின்னரே அம்லாவிற்கு துடுப்பாட்ட ஆலோசகராக செயற்பட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஹஷிம் அம்லா துடுப்பாட்ட ஆலோசகராக செயற்பட இருப்பது தொடர்பில் கேப் டவுன் பிளிட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஏஷ்வெல் பிரின்ஸ் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

”ஹஷிமிடம் இந்த விளையாட்டு (கிரிக்கெட்) தொடர்பான வளமான அனுபவமும், விளையாட்டு தொடர்பான போதிய அறிவும் இருக்கின்றது. எனவே, அவரை அணி முகாமைத்துவத்திற்குள் இணைப்பதன் மூலம் அவரிடம் இருக்கும் விடயங்களை நாம் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றோம்.“ 

ஹஷிம் அம்லாவின் துடுப்பாட்ட ஆலோசனைகளை பெறவுள்ள கேப் டவுன் பிளிட்ஸ் அணி, கடந்த ஆண்டு இடம்பெற்ற MSL தொடரில் இரண்டாமிடம் பெற்றதோடு இந்த ஆண்டு நடைபெறவுள்ள தொடரின் முதல் போட்டியில் ஜோஸி ஸ்டார்ஸ் அணியினை எதிர்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<