அமில அபோன்சுவின் இரண்டாம் இன்னிங்ஸ் அமெரிக்காவில்

83

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளரான அமில அபோன்சு, அமெரிக்கா கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளார்.

இதன்படி, அமெரிக்காவுக்கு தனது மனைவியுடன் குடிபெயர்வதற்கு தீர்மானித்துள்ள அவர், இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளார்.

தவான் தலைமையில் இலங்கை வரும் இந்திய கிரிக்கெட் அணி

இலங்கையின் முன்னணி கழகங்களில் ஒன்றான ராகம கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் தலைவராக செயல்பட்ட 27 வயதான அமில அபோன்சு, அமெரிக்காவில் வீரராகவும், பயிற்சியாளராகவும் செயல்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியில் போதியளவு வாய்ப்பு கிடைக்காமை அவரது ஓய்வுக்குக் காரணம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

கடந்த 2016ஆம் ஆண்டு ஒருநாள் அறிமுகத்தையும், 2018இல் T20 அறிமுகத்தையும் பெற்றுக்கொண்ட அவர், இலங்கை சார்பாக 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அத்துடன், அமில அபோன்சு இறுதியாக 2018இல் கொழும்பில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான T20 போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமன்றி, இலங்கை 15, 17, 19, 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்காக விளையாடிய அவர், இலங்கை வளர்ந்துவரும் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்

ICCயின் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரையில் பிரவீன் ஜயவிக்ரம

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஷெஹான் ஜயசூரியவும் கடந்த சில தினங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று அமெரிக்காவுக்குச் சென்றதுடன், தற்போது அங்குள்ள கழகத்துக்காக விளையாடுவதற்கு தயாராகியுள்ளார்.   

எனவே, இவர்கள் இருவரும் ஐக்கிய அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெறவுள்ளமைனர் கிரிக்கெட் லீக்கில் (MINOR CRICKET LEAGUE) பங்கேற்கவுள்ளனர்இப்போட்டித் தொடர் எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதில் ஷெஹான் ஜயசூரிய சிலிக்கன் வெலி ஸ்ட்ரைக்கர்ஸ் (SILICON VALLEY STRIKERS) அணிக்காகவும், அமில அபோன்சு அட்லாண்டா பயர் (ATLANTA FIRE) அணிக்காகவும் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<