Home Tamil மெதிவ்ஸின் சகலதுறை அதிரடியில் இலங்கை அபார வெற்றி

மெதிவ்ஸின் சகலதுறை அதிரடியில் இலங்கை அபார வெற்றி

85

சுற்றுலா ஆப்கான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது T20I போட்டியில் இலங்கை 72 ஓட்டங்களால் இலகு வெற்றியை பதிவு செய்திருப்பதோடு மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரினையும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

>>கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இணையும் துஷ்மன்த சமீர

முன்னதாக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் இலங்கை வீரர்களை துடுப்பாடப் பணித்தது.

தொடர்ந்து தொடரில் ஏற்கனவே 1-0 என முன்னிலை பெற்றிருந்த இலங்கை அணி தமது துடுப்பாட்டத்தினை குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க ஆகியோருடன் ஆரம்பித்தது. இலங்கை அணிக்காக அதிரடி ஆரம்பம் ஒன்றை பெதும் – குசல் ஜோடி வழங்கிய போதிலும் அவர்களால் நீண்ட இன்னிங்ஸ்களை ஆட முடியாமல் ஓய்வறை நடந்தனர். இதில் பெதும் நிஸ்ஸங்க 11 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 25 ஓட்டங்கள் எடுக்க, குசல் மெண்டிஸ் 23 ஓட்டங்கள் பெற்றார்.

இதன் பின்னர் வனிந்து ஹஸரங்க புதிய வீரராக களம் வந்து அதிரடியாக ஆடிய போதிலும் அவர் 9 பந்துகளுக்கு 22 ஓட்டங்கள் பெற்ற வேளை தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். ஹஸரங்கவின் பின்னர் சதீர சமரவிக்ரம மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸின் அபார இணைப்பாட்டத்தோடு இலங்கை அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதீர சமரவிக்ரம இப்போட்டியில் தன்னுடைய கன்னி T20I அரைச்சதத்தோடு 42 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற அஞ்செலோ மெதிவ்ஸ் வெறும் 22 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்கள் பெற்றார்.

ஆப்கான் பந்துவீச்சில் அஷ்மத்துல்லா மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 188 ஓட்டங்களை  அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 17 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

ஆப்கான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கரீம் ஜனாட் அதிகபட்சமாக 28 ஓட்டங்கள் பெற்றதோடு, இலங்கை அணியின் பந்துவீச்சில் அஞ்செலோ மெதிவ்ஸ், பினுர பெர்னாண்டோ, வனிந்து ஹஸரங்க மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இப்போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவானார். இலங்கை – ஆப்கான் அணிகள் மோதும் மூன்றாவதும் இறுதியுமான T20I போட்டி புதன்கிழமை (21) நடைபெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
187/6 (20)

Afghanistan
115/10 (17)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Azmatullah Omarzai 25 11 5 0 227.27
Kusal Mendis c Noor Ahmad b Fazal Haq Farooqi 23 14 4 0 164.29
Dhananjaya de Silva c Ibrahim Zadran b Mohammad Nabi 14 14 1 0 100.00
Sadeera Samarawickrama hit-wicket b Naveen ul Haq 51 42 5 0 121.43
Wanidu Hasaranga c Ibrahim Zadran b Mohammad Nabi 22 9 1 2 244.44
Charith Asalanka c Naveen ul Haq b Azmatullah Omarzai 4 8 0 0 50.00
Angelo Mathews not out 42 22 2 4 190.91


Extras 6 (b 0 , lb 5 , nb 0, w 1, pen 0)
Total 187/6 (20 Overs, RR: 9.35)
Bowling O M R W Econ
Fazal Haq Farooqi 4 0 31 1 7.75
Azmatullah Omarzai 4 0 40 2 10.00
Naveen ul Haq 4 0 46 1 11.50
Karim Janat 2 0 20 0 10.00
Mohammad Nabi 4 0 25 2 6.25
Noor Ahmad 2 0 20 0 10.00


Batsmen R B 4s 6s SR
Hazratullah Zazai c Kusal Mendis b Angelo Mathews 1 2 0 0 50.00
Ibrahim Zadran c Maheesh Theekshana b Angelo Mathews 10 7 2 0 142.86
Rahmanullah Gurbaz lbw b Maheesh Theekshana 13 8 2 0 162.50
Gulbadin Naib c Wanidu Hasaranga b Binura Fernando 4 8 0 0 50.00
Azmatullah Omarzai b Binura Fernando 0 1 0 0 0.00
Mohammad Nabi c Kusal Mendis b Dasun Shanaka 27 17 1 2 158.82
Karim Janat c Dasun Shanaka b Wanidu Hasaranga 28 23 2 1 121.74
Najibullah Zadran b Wanidu Hasaranga 9 15 1 0 60.00
Noor Ahmad not out 5 9 0 0 55.56
Naveen ul Haq b Matheesha Pathirana 5 9 1 0 55.56
Fazal Haq Farooqi c Dasun Shanaka b Matheesha Pathirana 2 3 0 0 66.67


Extras 11 (b 0 , lb 0 , nb 0, w 11, pen 0)
Total 115/10 (17 Overs, RR: 6.76)
Bowling O M R W Econ
Angelo Mathews 2 0 9 2 4.50
Binura Fernando 2 0 18 2 9.00
Maheesh Theekshana 4 0 30 1 7.50
Wanidu Hasaranga 4 0 19 2 4.75
Matheesha Pathirana 3 0 22 2 7.33
Dasun Shanaka 2 0 17 1 8.50



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<