2023 உலகக் கிண்ணத்தை குறிவைக்கும் ஆதில் ரஷீட்

63

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இடதுகை மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீட், 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரிலும் விளையாடுவேன் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் 2023ம் ஆண்டு நடைபெறும் போது, ஆதில் ரஷீட்டின் வயது 35ஐ கடந்துவிடும் என்றாலும், தங்களுடைய கிண்ணத்தை தக்கவைப்பதற்கு உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  

IPL கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளராக லசித் மாலிங்க தெரிவு

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டின் சிறந்த தலைவர்களாக ……….

தொடர்ச்சியாக தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்து வரும் ரஷீட், கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் வலி ஏற்படுவதை தடுப்பதற்கான ஊசிகளை எடுத்துக்கொண்டு போட்டிகளில் விளையாடினார்.

இந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட இவர், மிக விரைவில் இங்கிலாந்து அணிக்காக விளையாட எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட இவர், “எனது உபாதை குணமடைவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கும் என தெரியவில்லை. மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகலாம். எனக்கு சில கனவுகள் இருக்கிறன. அதனை 2023ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் பெறமுடிந்தால், மிகவும் சந்தோஷப்படுவேன். அதுமாத்திரமின்றி எனது தோற்பட்டை உபாதை குணமடையும் பட்சத்தில் மேலும் பல காலங்களுக்கு போட்டிகளில் ஆடமுடியும்” என்றார்.

ரஷீட் கடந்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை.  தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அவரது விக்கெட் சராசரி 47.81 ஆக மாறியிருந்தது. ஆனால், அணித் தலைவர் இயன் மோர்கன், ஆதில் ரஷீட்டின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை.

“எனது தோற்பட்டை சிறப்பாக இல்லை என இயன் மோர்கனுக்க தெரியும். ஆனால், அவர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார். உலகக் கிண்ணத்துக்கு வரும் போது, நான் சிறந்த மன தையரியத்துடன் வந்து, என்னால் இயலுமானதை செய்தேன். அதேபோன்று, இனிவரும் காலங்களிலும் சிறப்பாக பயிற்சிகளை மேற்கொண்டு பலமாக திரும்பி வருவேன் என நினைக்கிறேன்”

அதேநேரம், கடந்த உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய இவர், ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். குறித்த போட்டியில் சிறப்பாக பந்துவீசியதற்கான காரணம், தன்னுடைய தோற்பட்டை பலமாக இருந்தமை என குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், அடுத்த வருடம் இந்தியாவில் உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது. இந்திய ஆடுகளங்களை பொருத்தவரை அதிகமாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களாக அமையும். எனவே, குறித்த உலகக் கிண்ணத் தொடரில் ஆதில் ரஷீட் விளையாடினால், இங்கிலாந்து அணிக்கு அது மிகச்சிறந்த விடயமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<