அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் அடம் ஷம்பாவிற்கு கொவிட்-19 தொற்று

400

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீச்சாளரான அடம் ஷம்பாவிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆஸி. அணியினை விட நாம் நம்பிக்கையுடன் இருக்கின்றோம் – தீக்ஷன

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுப் போட்டி இன்று நடைபெறும் நிலையிலேயே ஷம்பா கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.

அதன்படி அடம் ஷம்பா இன்றைய நாளுக்கான போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியிருக்கும் நிலையில் அவரின் பிரதியீட்டு வீரராக அஸ்டன் ஏகார் அல்லது கெமரூன் கீரின் ஆகிய இருவரில் ஒருவர் அவுஸ்திரேலிய அணியில் இணைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ணப் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<