தென்னாபிரிக்காவை வழிநடத்தும்படி வந்த அழைப்பு வதந்தி – டி வில்லியர்ஸ்

74

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏபி டி வில்லியர்ஸை மீண்டும் அவ்வணியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளது என செய்திகள் வெளியாகின. எனினும், ஊடகங்கள் வாயிலாக வெளியாகியிருந்த குறித்த செய்தியை தான் முற்றிலும் மறுப்பதாக டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். 

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆட்டக்காரருமான டி வில்லியர்ஸ் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்தும்ய்வு பெற்றார்

ஆனாலும், அவர் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்

தென்னாபிரிக்க கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக கிரேம் ஸ்மித்

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான 39 வயதான……

மொத்தமாக 114 டெஸ்ட், 228 சர்வதேச ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடியுள்ள 36 வயதான டி வில்லியர்ஸ், கடந்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார். ஆனால் அவரது விருப்பத்தை தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை நிராகரித்தது.

டி வில்லியர்ஸின் திடீர் ஓய்வால், அவரது இடத்தை நிரப்ப முடியாமல் திணறிவரும் தென்னாபிரிக்கா அணி, 2019 உலகக் கிண்ணத்தில் லீக் சுற்றுடன் வெளியேறியது மட்டுமல்லாமல், அதன்பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்தது

இந்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்தைக் கருத்தில்கொண்டு, டி வில்லியர்ஸை மீண்டும் அணிக்குள் கொண்டுவரும் முயற்சியில் தென்னா்பிரிக்கா அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவல்கள், மார்க் பவுச்சர் தலைமை பயிற்சியாளரானது முதல் வந்துகொண்டு இருப்பதை அவதானிக்க முடிகின்றது.  

இதற்கிடையே, தொடர் தோல்விகளின் விளைவாக பாப் டு ப்ளெசிஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு குயிண்டன் டி கொக் அண்மையில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை நிர்வாகத்தில் தற்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறன

தென்னாபிரிக்கா அணியின் புதிய பயிற்சியாளராக இருக்கும் மார்க் பவுச்சர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் டி வில்லியர்ஸ் நல்ல போர்மில் இருப்பதை நிரூபித்தால் எதிர்வரும்க்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்கா அணி தேர்வில் அவர் கருத்தில் கொள்ளப்படுவார்” என்று தெரிவித்து இருந்தார்.  

அத்துடன் தென்னாபிரிக்கா கிரிக்கெட்டின் புதிய இயக்குனராக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் வீரரான கிரேம் ஸ்மித், ஒருநாள் அணித் தலைவர் பதவிக்கு குயிண்டன் டி கொக் பொருத்தமற்றவர் என தெரிவித்திருந்தார். எனவே, எதிர்வரும் காலங்களில் மாற்றங்கள் இடம்பெறும் என சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் டி வில்லியர்ஸ் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில் கூறியதாவது, 

”தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்க தான் செய்கிறது. மேலும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையும் அணியின் தலைவர் பொறுப்பை மீண்டும் வகிக்க முடியுமா? என்று கேட்டது

சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்கா அணிக்கு நான் திரும்ப வேண்டுமென்றால் உயர்வான போர்மில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அத்துடன் அணியில் இருக்கும் மற்ற வீரர்களை விட நான் சிறப்பாக இருக்க வேண்டியதும் அவசியமானதாகும்

தென்னாபிரிக்காவின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

இந்த ஜூன் மாதம்……

அணியில் இடம்பெறுவதற்கு தகுதியான போர்மில் இருப்பதாக நான் உணர்ந்தால் தான், இறுதி பதினொருவர் அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு என்னால் எளிதாக வர முடியும்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியில் நான் சிறிது காலம் இடம்பெறவில்லை. எனவே, தென்னாபிரிக்கா அணியில் இடம்பெற இன்னும் தகுதியானவர் என்பதை நானும், மற்றவர்களும் உணர வேண்டியது முக்கியமானதாகும். தற்போது நம்மை சுற்றி கொரோனா வைரஸ் பிரச்சினை நிலவி வருகிறது. எனவே எதிர்கால போட்டி அட்டவணையில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியவில்லை” என அவர் குறித்த நிகழ்ச்சியில் தெரிவித்ததாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், தென்னாபிரிக்கா அணியின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்குமாறு ஊடகங்கள் வாயிலாக வெளியாகிய செய்தியை தான் முற்றிலும் மறுப்பதாகவும், அந்த செய்தி உண்மை அல்ல எனவும் ஏபி டி வில்லியரஸ், தனது டுவிட்டர் ஊடாக பதிவொன்றை நேற்றைய தினம் (29) வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<