தென்னாபிரிக்காவின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

62

இந்த ஜூன் மாதம் இலங்கை வரவிருந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கை வீரர்களுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இலங்கையில் IPL நடக்குமா? வெளியான புதிய தகவல்

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரை தங்கள் நாட்டில் நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் …

எனினும், இந்த கிரிக்கெட் தொடர்கள் தற்போது உலகில் நிலவுகின்ற கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபை தாம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இன்று (20) உறுதி செய்தது. 

”இந்த கிரிக்கெட் தொடர்களை ஒத்திவைக்கும் தீர்மானத்தினை இலங்கை கிரிக்கெட் சபையும், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையும் இணைந்து எடுத்திருக்கின்றன. விடயங்கள் அனைத்தும் சரியான பின்னர், சர்வதேசப் போட்டிகளின் நாற்காட்டிக்கு அமைய இந்த தொடர்களுக்கான மறுதிகதி அறிவிக்கப்படும்.”  என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்.  

அதேநேரம், தற்போது ஒத்திவைக்கப்பட்டிருக்கும் இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்கள் 2021ஆம் ஆண்டிலோ அல்லது 2022ஆம் ஆண்டிலோ நடைபெறலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது. 

முன்னதாக, இந்த மார்ச் மாதம் இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையில் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியுடன் இலங்கை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் என்பவற்றிலும் விளையாடவுள்ளது. இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்கள் இடம்பெறுவதில் உறுதியுடன் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தெரிவித்திருக்கின்றது.  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<