தென் கொரியாவில் இம்மாதம் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இலங்கை அணியில் நட்சத்திர வீரர்களான யுபுன் அபேகோன், தருஷி கருணாரட்ன ஆகிய இருவரும் பங்குபற்றவுள்ளனர்.
26ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் இம்மாதம் 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை தென் கொரியாவின் குமி நகரில் நடைபெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் 20 வீரர்களைக் கொண்ட அணியை இலங்கை மெய்வல்லுனர் சங்கம் பரிந்துரைத்துள்ளது.
ஒலிம்பிக் வீரரும், பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 10 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான இலங்கையின் நட்சத்த்pர குறுந்தூர வீரர் யூபுன் அபேகோன் முதல் முறையாக ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறார். 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவிற்குப் பிறகு யுபுன் அபேகோன் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றுகின்ற முதல் சர்வதேசப் போட்டித் தொடர் இதுவாகும்.
அதேபோல, துபாயில் நாளை (9 ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள துபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையைச் சேர்ந்த 4×100 மீற்றர் ஆண்கள் அஞ்சலோட்ட அணி பங்குபற்றவுள்ளது. இதில் யுபுன் அபேகோனும் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். அதேபோல, இந்த அணியில் சமோத் யோதசிங்க, மெரோன் விஜேசிங்க, தெனெத் வீரரட்ன மற்றும் சமோட் திசாநாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்;
இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆசியாவின் சம்பியனும், தற்போது அமெரிக்காவில் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற இலங்கையின் நட்சத்திர மத்திய தூர ஓட்ட வீராங்கனையுமான தருஷி கருணாரட்ன இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்க மாட்டார். என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு கரம் கொடுக்கும் MAS நிறுவனம்
ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 2ஆவது பதக்கதுக்கு குறிவைத்துள்ள தனஞ்சனா
இதனிடையே, இந்த ஆண்டு ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை 10 போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் என்றும், குறைந்தபட்சம் எட்டு பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் செயலாளர் சமன் குமார குணவர்தன தெரிவித்தார்.
இறுதியாக கடந்த 2023ஆம் ஆண்டு பாங்கொக்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை மூன்று தங்கப் பதக்கங்கள் உட்பட எட்டு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றது. இதில் நதீஷா ராமநாயக்க (பெண்களுக்கான 400 மீற்றர்), தருஷி கருணாரட்;ன (பெண்களுக்கான 800 மீற்றர்) மற்றும் 4×400 மீற்றர் ஆண்கள் அஞ்சலோட்ட அணி தங்கப் பதக்கங்களையும் வெனறது.
52 ஆண்டுகால ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கை அணி இதுவரை 22 தங்கப் பதக்கங்கள், 20 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 24 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்தப் போட்டியில் தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு நாடு வென்ற இரண்டாவது அதிகபட்ச தங்கப் பதக்கங்கள் இதுவாகும்.
இதுவரை நடைபெற்றுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற நாடுகளில் இலங்கை 10ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை இந்தப் போட்டியில் சீனா 325 தங்கப் பதக்கங்களை வென்று அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தியா 94 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆண்கள்அணிவிபரம்:-
யூபுன் அபேகோன் (100 மீ, 200 மீ மற்றும் 4×100 மீ), சமோத் யோதசிங்க (100 மீ மற்றும் 4×400 மீ), மெரோன் விஜேசிங்க (4×400 மீ அஞ்சலோட்டம்), தெனெத் வீரரட்ன (4×100 மீ அஞ்சலோட்டம்), சமோத் திசாநாயக்க (4×100 மீ அஞ்சலோட்டம்), காலிங்க குமாரகே (4×400 மீ – கலப்பு அஞ்சலோட்டம்), அருண தர்ஷன (4×400 மீ – அஞ்சலோட்டம் மற்றும் 4×400 மீ – கலப்பு அஞ்சலோட்டம்), சதேவ் ராஜகருணா (4×400 மீ அஞ்சலோட்டம்), ஒமெல் ஷஷிந்த (4×400 மீ அஞ்சலோட்டம்), கல்ஹார இந்துப (4×400 மீ அஞ்சலோட்டம்), சுமேத ரணசிங்க (ஈட்டி எறிதல்), ருமேஷ் தரங்க (ஈட்டி எறிதல்), லெசேது அதாவிது (உயரம் பாய்தல்)
பெண்கள் அணி விபரம்:-;
நதீஷா ராமநாயக்க (400 மீ – 4 ×400 மீ – கலப்பு அஞ்சலோட்டம்), சயூரி லக்ஷிமா மெண்டிஸ் (4×400 மீ – கலப்பு அஞ்சலோட்டம்), நிஷேந்திரா பெர்னாண்டோ (4×400 மீ அஞ்சலோட்டம்), ஜெயேஷி உத்தரா (4×400 மீ அஞ்சலோட்டம்), ஜித்மா விஜேதுங்க (4×400 மீ அஞ்சலோட்டம்), தில்ஹானி லேகம்கே (ஈட்டி எறிதல்), ரசாரா விஜேசூரிய (5000 மீற்றர், 10000 மீற்றர்)
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<