கோஹ்லியை அணியில் தேர்வு செய்ய இலஞ்சம் கோரிய அதிகாரி?

79

தன்னை உள்நாட்டு கிரிக்கெட் அணியில் சேர்க்க லஞ்சம் கேட்டதாகவும் அதற்கு தனது தந்தை கண்டிப்புடன் மறுத்து விட்டதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்

இன்ஸ்டாகிராம் நேரடி கலந்துரையாடலில் இந்திய கால்பந்து அணியின் தலைவர் சுனில் சேத்ரியுடன், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி உரையாடினார்.  

>> கொரோனாவினால் இலங்கை – இந்தியா தொடர் ரத்தாகுமா?

அப்போது, தன்னை அணியில் தேர்வு செய்ய தனது தந்தையிடம் டெல்லி கிரிக்கெட் அணியைச் சேர்ந்த அதிகாரியொருவர் இலஞ்சம் கோரியதை கோஹ்லி நினைவுகூர்ந்தார். அதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,  

“நான் இதனை ஏற்கெனவே கூறியிருக்கிறேன். மாநில கிரிக்கெட்டில் ஒரு காலக்கட்டத்தில் நிறைய விடயங்கள் நடக்கும். பல விடயங்கள் நியாயம் தர்மத்தை மீறியதாக இருக்கும். விதிமுறைகளை மீறி தகுதி, திறமை மட்டும் போதாது, அதற்கு மேல் சிலது தேவை என்று யாராவது ஒருவர் கூறுவார்

என் தந்தை தெருவிளக்கில் படித்து வழக்கறிஞர் ஆனார். வாழ்க்கையில் ஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். அதற்கு முன்னதாக வணிக கடற்படையில் பணியாற்றினார்

அவ்வளவு கடினமாக உழைத்தவருக்கு அங்குப் பேசப்படும் மொழி புரியவில்லை. என்ன நடக்கிறது என்று அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

என் தந்தை பயிற்சியாளரிடம் என்ன கூறினார் தெரியுமா? ‘விராட் அவன் திறமையினால் தேர்வு செய்யப்பட்டால் நல்லது. இல்லையெனில் அவன் விளையாட வேண்டாம், நான் இலஞ்சமெல்லாம் கொடுக்க மாட்டேன்என திட்டவட்டமாக கூறினார்” என்று தெரிவித்தார்.   

கிரிக்கெட்டுக்குள் நுழைய எந்த குறுக்கு வழியும் பயன்படுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார் விராட் கோலியின் தந்தை பிரேம். “அவர் என்னுடைய பயிற்சியாளரிடம் கூறினார், ‘ஒருவேளை அவன் (விராட்) மெரிட்டில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் பரவாயில்லை. அவன் விளையாடத் தேவையில்லை. அதற்காக நான் இதையெல்லாம் செய்ய மாட்டேன் என்றார். நான் அதில் தேர்வாகவில்லை. நிறைய அழுதேன். நான் உடைந்தே போய்விட்டேன். ஆனால் இது எனக்கு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது” என்று கோஹ்லி கூறினார்

“உலகம் இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னேற வேண்டுமெனில் யாரும் செய்யாத ஒன்றை நாம் செய்ய வேண்டும். அதாவது உன் சொந்த கடின உழைப்பைத்தான் நீ நம்பவேண்டும் என்ற பாடத்தை இது எனக்குக் கற்றுத் தந்தது. இதைத்தான் என் தந்தை வாழ்ந்ததாக நான் பார்த்தேன், கற்றுக் கொண்டேன். எனக்கு சரியானவற்றை, சரியான செயல்களைக் கற்றுக் கொடுத்த சம்பவமாகும் இது” என அவர் தெரிவித்தார்.

>> இலங்கையில் ஐ.பி.எல் நடத்த மெத்யூ ஹேடன் ஆதரவு

18 வயதில் கர்நாடகாவுக்கு எதிராக டெல்லி அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது, ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது கோஹ்லியின் தந்தை உயிரிழந்தார்

இருப்பினும், தனது தந்தை கடைசியாக மூச்சு விடுவதைக் கண்ட இளம் கோஹ்லி, மறுநாள் காலையில் மைதானத்திற்குச் சென்று டெல்லியின் ஆட்டத்தைக் காப்பாற்ற ஒரு சிறந்த இன்னிஸ்ஸொன்றை விளையாடினார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<