பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தவறவிடும் பெதும் நிஸ்ஸங்க

Sri Lanka Tour of Pakistan 2026

3
Sri Lanka Tour of Pakistan 2026

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பப் துடுப்பாட்ட வீரரான பெதும் நிஸ்ஸங்க விலகியுள்ளார்.

பெதும் நிஸ்ஸங்கவின் இடது காலின் தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று (26) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான லஹிரு உதாரவை டெஸ்ட் அணியில் இணைத்துக்கொள்ள கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே லஹிரு உதார ஒருநாள் குழாத்தின் உறுப்பினராக பாகிஸ்தானில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குசல் மெண்டிஸின் தலைமையில் 15 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

குசல் மெண்டிஸ் புதிய டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் எதிர்கொள்ளும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் நவம்பர் 09 ஆம் திகதி ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.

>> கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<