சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணியானது 2 விக்கெட்டுக்களால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>>இலங்கை வரும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி
ராவல்பிண்டியில் முன்னதாக ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியினர் முதலில் இங்கிலாந்தினை துடுப்பாடப் பணித்தனர்.
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இரு அணிகளும் வெற்றிகளை பதிவு செய்யாத நிலையில் இலங்கை இப்போட்டிக்காக ஒரு மாற்றத்தினை மேற்கொண்டிருந்தது. துனித் வெல்லாலகே சசிந்து கொலம்பகேவிற்குப் பதிலாக இணைக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து நாணயசுழற்சி முடிவுகளுக்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டொம் பேன்டன் 51 பந்துகளில் 50 ஓட்டங்களும், பென் டக்கட் 29 ஓட்டங்களும் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் பொறுப்புடன் விளையாடி 66 பந்துகளில் 69 ஓட்டங்கள் எடுத்தார்.
அதன் பின்னர் இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இங்கிலாந்து அணியின் தலைவர் ஹர்ரி புரூக், வெறும் 116 பந்துகளில் 21 பௌண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கலாக இரட்டைச்சதம் விளாசி 202 ஓட்டங்கள் எடுத்தார். இவருக்கு உறுதுணையாக இருந்த வில் ஜேக்ஸ் அதிரடி அரைச்சதம் பெற இங்கிலாந்து அணியானது 50 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 429 ஓட்டங்கள் பெற்றது.
இங்கிலாந்து அணி 429 ஓட்டங்கள் மூலம் பாகிஸ்தானில் அணியொன்று ஒருநாள் போட்டிகளுக்காக எடுத்த அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்ய, ஹர்ரி புரூக் வெறும் 114 பந்துகளில் இரட்டைச்சதம் கடந்து ஒருநாள் போட்டிகளில் அதிகுறைந்த பந்துகளில் இரட்டைச்சதம் பெற்ற வீரராக சாதனை நிலைநாட்டினார். அத்துடன் இங்கிலாந்து சார்பில் ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் பெற்ற முதல் வீரராகவும் மாறினார். வில் ஜேக்ஸ் ஆட்டமிழக்காது 30 பந்துகளில் 8 பெளண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 66 ஓட்டங்கள் பெற்றார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ மற்றும் ஜனித் லியனகே தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட இமலாய இலக்கான 430 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி தொடக்கத்திலேயே 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும் இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் பவன் ரத்நாயக்க ஆகிய இருவரும் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 172 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டத்தின் நிறைவாக அவிஷ்க பெர்னாண்டோ 83 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 97 ஓட்டங்கள் பெற்றார்.
அதன் பின்னர் தசுன் ஷானக்க – பவான் ரத்நாயக்கவுடன் இணைந்து அதிரடியுடன் இலங்கை அணிக்காக ஓட்டங்களை உயர்த்தத் தொடங்கினார். பவான் இதில் தன்னுடைய இரண்டாவது ஒருநாள் சதத்தினையும் பூர்த்தி செய்தார்.
பவான் – தசுன் ஜோடி இலங்கை அணியின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 133 ஓட்டங்கள் பெற்றது. இந்த இணைப்பாட்டத்தின் நிறைவாக ஆட்டமிழந்த பவான் ரத்நாயக்க 3 சிக்ஸர்கள் மற்றுமு 15 பௌண்டரிகள் அடங்கலாக 130 ஓட்டங்கள் பெற்று தன்னுடைய சிறந்த ஒருநாள் இன்னிங்ஸை பதிவு செய்தார்.
மறுமுனையில் இலங்கை அணிக்காக தொடர்ந்து அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய தசுன் ஷானக்க சதத்தினை நெருங்கிய நிலையில் 50 பந்துகளுக்கு 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஆனால் இவரின் பின்னர் இலங்கை அணிக்கு நம்பிக்கையாக காணப்பட்ட ஜனித் லியனகே அதிரடி கலந்த நிதானத்துடன் வெற்றியை நோக்கி முன்னேறிய போதும் இறுதி ஓவரில் சிறிய தடுமாற்றம் ஒன்றை முகம் கொடுத்தது. எனினும், போட்டியின் இறுதிப் பந்திற்கு முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய ஜனித் லியனகே இலங்கை அணியினை போட்டியின் வெற்றிக்கு கோட்டிற்கு எடுத்துச் சென்றார்.
ஜனித் லியனகேவின் ஆட்டத்தோடு இலங்கை அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 430 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஜனித் லியனகே இறுதிவரை ஆட்டமிழக்காது 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் பெற்றார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜோஸ் டங் 3 விக்கெட்டுக்களையும், சேம் கர்ரன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக பவான் ரத்நாயக்க தெரிவாகியிருந்தார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது கடந்த 20 வருடங்களில் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை விரட்டிய அணியாக சாதனை செய்திருப்பதோடு, ஒருநாள் போட்டிகளில் விரட்டப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள் இப்போட்டியிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Tom Banton | c Janith Liyanage b Dunith Wellalage | 50 | 51 | 9 | 0 | 98.04 |
| Ben Duckett | lbw b Dunith Wellalage | 29 | 39 | 2 | 0 | 74.36 |
| Joe Root | c Dunith Wellalage b Asitha Fernando | 69 | 66 | 8 | 0 | 104.55 |
| Harry Brook | c Sahan Arachchige b Janith Liyanage | 202 | 116 | 21 | 10 | 174.14 |
| Will Jacks | not out | 66 | 30 | 8 | 3 | 220.00 |
| Extras | 13 (b 1 , lb 1 , nb 2, w 9, pen 0) |
| Total | 429/4 (50 Overs, RR: 8.58) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Asitha Fernando | 10 | 1 | 68 | 1 | 6.80 | |
| Dilshan Madusanka | 10 | 0 | 89 | 0 | 8.90 | |
| Eshan Malinga | 10 | 0 | 91 | 0 | 9.10 | |
| Dunith Wellalage | 10 | 0 | 56 | 2 | 5.60 | |
| Dasun Shanaka | 6 | 0 | 74 | 0 | 12.33 | |
| Kamindu Mendis | 2 | 0 | 17 | 0 | 8.50 | |
| Janith Liyanage | 2 | 0 | 32 | 1 | 16.00 | |
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Kamindu Mendis | b Josh Tongue | 18 | 16 | 3 | 1 | 112.50 |
| Avishka Fernando | c & b Jamie Overton | 97 | 83 | 11 | 2 | 116.87 |
| Kusal Mendis | run out (Gus Atkinson) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
| Pavan Rathnayake | c Tom Banton b Sam Curran | 130 | 106 | 15 | 3 | 122.64 |
| Dasun Shanaka | c Tom Banton b Liam Dawson | 97 | 50 | 6 | 8 | 194.00 |
| Janith Liyanage | not out | 61 | 27 | 7 | 3 | 225.93 |
| Sahan Arachchige | c Will Jacks b Sam Curran | 13 | 8 | 2 | 0 | 162.50 |
| Dunith Wellalage | b Josh Tongue | 8 | 7 | 1 | 0 | 114.29 |
| Eshan Malinga | b Josh Tongue | 0 | 1 | 0 | 0 | 0.00 |
| Asitha Fernando | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
| Extras | 5 (b 1 , lb 1 , nb 0, w 3, pen 0) |
| Total | 430/8 (49.5 Overs, RR: 8.63) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Gus Atkinson | 7 | 0 | 57 | 0 | 8.14 | |
| Josh Tongue | 8.5 | 1 | 79 | 3 | 9.29 | |
| Jamie Overton | 10 | 0 | 77 | 1 | 7.70 | |
| Liam Dawson | 10 | 0 | 71 | 1 | 7.10 | |
| Sam Curran | 9 | 0 | 103 | 2 | 11.44 | |
| Will Jacks | 5 | 0 | 49 | 0 | 9.80 | |






















