Home Tamil சுழலுக்கு தடுமாறிய இலங்கை வீரர்கள்

சுழலுக்கு தடுமாறிய இலங்கை வீரர்கள்

England tour of Sri Lanka 2026 

3
England tour of Sri Lanka 2026

இலங்கை – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், சுழலுக்கு தடுமாறி முதல் துடுப்பாட்டத்தினை நிறைவு செய்துள்ள இலங்கை வீரர்கள் இங்கிலாந்துக்கு போட்டியின் வெற்றி இலக்காக 220 ஓட்டங்களை நிர்ணயம் செய்துள்ளனர்.

>>அவுஸ்திரேலிய இளையோர் அணியிடம் இலங்கை படுதோல்வி<<

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து வீரர்கள் ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடுகின்றனர். இதில் இரண்டு அணிகளும் பங்கெடுக்கும் ஒருநாள் தொடர் முதலாவதாக நடைபெறுகின்றது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்க தீர்மானம் கொண்ட இரண்டாவது போட்டி முன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சரித் அசலன்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்காகப் பெற்றிருந்தார். இப்போட்டிக்கான இலங்கை குழாம் முதல் போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் மாற்றங்கள் இன்றி களமிறங்கியது.

இலங்கை XI

 

பெதும் நிஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, துனித் வெல்லாலகே, பிரமோத் மதுஷான், ஜெப்ரி வண்டர்செய், அசித பெர்னாண்டோ

நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கை வீரர்களுக்கு சிறந்த தொடக்கம் அமையவில்லை. ஆரம்ப வீரர்களில் ஒருவரான கமில் மிஷார வெறும் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். இருப்பினும், இருவரும் தலா 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் மத்திய வரிசையில் களம் வந்த அணித்தலைவர் சரித் அசலங்க மற்றும் தனன்ஞய டி சில்வா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது.

எனினும் இரண்டு வீரர்களினதும் விக்கெட்டுக்களை அடுத்து, சுழலுக்கு தடுமாறிய இலங்கை வீரர்கள் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட்டங்கள் எடுத்தனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் சரித் அசலன்க 45 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

இங்கிலாந்தின் பந்துவீச்சில் ஜோ ரூட், ஜேமி ஓவர்டன் மற்றும் ஆதில் ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

Live
Sri Lanka
219/10 (49.3)
England
154/3 (35)
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Will Jacks b Adil Rashid 26 37 2 1 70.27
Kamil Mishara  c Ben Duckett b Jamie Overton 5 12 1 0 41.67
Kusal Mendis run out (Will Jacks) 26 45 2 0 57.78
Dhananjaya de Silva c Joe Root b Liam Dawson, 40 59 4 0 67.80
Charith Asalanka c Ben Duckett b Adil Rashid 45 64 1 0 70.31
Janith Liyanage  c Adil Rashid b Jamie Overton 12 11 2 0 109.09
Pavan Rathnayake c Liam Dawson, b Will Jacks 29 34 3 0 85.29
Dunith Wellalage c Sam Curran b Joe Root 20 19 1 0 105.26
Pramod Madushan st Jos Buttler b Rehan Ahmed 8 10 0 0 80.00
Jeffery Vandersay not out 1 4 0 0 25.00
Asitha Fernando c & b Joe Root 0 1 0 0 0.00
Extras 7 (b 0 , lb 2 , nb 0, w 5, pen 0)
Total 219/10 (49.3 Overs, RR: 4.42)
Bowling O M R W Econ
Jamie Overton 5 1 21 1 4.20
Sam Curran 4 0 16 0 4.00
Liam Dawson, 10 1 41 1 4.10
Will Jacks 10 1 47 0 4.70
Adil Rashid 10 0 34 2 3.40
Jacob Bethell 3 0 20 0 6.67
Rehan Ahmed 5 0 21 0 4.20
Joe Root 2.3 0 12 0 5.22

Batsmen R B 4s 6s SR
Rehan Ahmed b Dhananjaya de Silva 13 18 1 0 72.22
Ben Duckett b Jeffery Vandersay 39 51 2 1 76.47
Joe Root not out 66 74 5 0 89.19
Jacob Bethell c Charith Asalanka b Dhananjaya de Silva 6 14 0 0 42.86
Harry Brook not out 28 52 1 0 53.85
Extras 2 (b 0 , lb 1 , nb 0, w 1, pen 0)
Total 154/3 (35 Overs, RR: 4.4)
Bowling O M R W Econ
Asitha Fernando 4 0 17 0 4.25
Pramod Madushan 3 0 14 0 4.67
Dhananjaya de Silva 7 0 37 2 5.29
Dunith Wellalage 7 0 34 0 4.86
Charith Asalanka 7 0 22 0 3.14
Jeffery Vandersay 7 0 29 1 4.14

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<