சர்வதேச லீக் டி20 (ILT20) தொடரின் தற்போதைய பருவத்திற்கான தொடரில் ஆப்கானிஸ்தானின் இளம் மணிக்கட்டுச் சுழற்பந்துவீச்சாளரான நூர் அஹ்மட் டெசர்ட் வைப்பர்ஸ் (Desert Vipers) அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
>>இலங்கை வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!<<
இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க இந்தத் தொடரில் டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகிய நிலையில், அவருக்குப் பதிலாக மாற்று வீரராகவே 20 வயதான நூர் அஹ்மட் வைப்பர்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
நூர் அஹ்மட் IPL, CPL, BBL உள்ளிட்ட பல்வேறு T20 லீக்குகளில் விளையாடிய அனுபவம் கொண்டிருப்பதோடு, இறுதியாக நடைபெற்று முடிந்த IPL தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக 24 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் காணப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நூர் அஹ்மட் இதற்கு முன்னர் ILT20 தொடரின் முதல் பருவத்தில் ஷார்ஜா வோரியர்ஸ் அணிக்காகவும் விளையாடியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
அதேவேளை டெசர்ட் வைப்பர்ஸ் அணி இந்தப் பருவத்திற்கான ILT20 தொடரினை நேற்றைய தினம் (02) டுபாய் கெபிடல்ஸ் உடன் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆரம்பம் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















