வெள்ளப்பெருக்கு நிவாரணப் பணிகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபை உதவிக்கரம்

SLC support towards flood relief efforts

80
SLC support towards flood relief efforts

கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபை பல்வேறு ஆதரவுகளை வழங்கி வருகிறது. அதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டிட்வா புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்காக கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அவசரகால பேரிடர் முகாமாக கடந்ம வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதன்படி, ஆபத்தான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட 3,000 மக்களை இங்கு தங்க வைத்து, அடிப்படை வசதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

நிவாரண முகாம் சீராக செயல்பட அரசு அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுமாறு மைதான நிர்வாகத்திற்கு இலங்கை கிரிக்கெட் சபை உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபையானது தினசரி உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறது. சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவாக தினமும் உணவுப் பொதிகள் அரசின் அதிகாரப்பூர்வ நிவாரண விநியோக நிலையங்களுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் பொருளாளர் சுஜீவ கொடலியத்த ஆகியோர், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஏனைய அரசு அதிகாரிகளை சந்தித்து, நடைபெற்று வரும் நிவாரண திட்டங்களுக்கு முழு ஆதரவை தெரிவித்தனர்.

இந்த இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இலங்கை தேசிய கிரிக்கெட் அணி சனிக்கிழமை ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்ற முக்கோண T20I தொடரின் இறுதிப் போட்டிக்கு முன் நடைபெற்ற இந்த அஞ்சலியில் பாகிஸ்தான் வீரர்களும் இணைந்து கும் வகையில் இலங்கை அணி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது. இதில் பாகிஸ்தான் வீரர்களும் பங்கேற்றனர்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<