கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றிலிருந்து விலகும் வடகொரியா

FIFA World cup 2022

179

அடுத்த ஆண்டில் (2022) நடைபெறவுள்ள பிபா கால்பந்து உலகக் கிண்ணத் தொடருக்கான ஆசியப் பிராந்திய அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் சுற்றுத்தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் என இரண்டு முக்கிய தொடர்களிலும் இருந்து வடகொரிய அணி விலகுவதாக வடகொரிய கால்பந்து சம்மேளனம் அறிவித்திருக்கின்றது.   

மாற்றங்களுடன் மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்த இலங்கை கால்பந்து அணி

கால்பந்து உலகக் கிண்ணத் தொடருக்கான ஆசியப் பிராந்திய அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் சுற்றுத்தொடரில் குழு H இல் காணப்படுகின்ற வடகொரியா தற்போது விலகியிருக்கும் விடயம் அதன் குழுவில் உள்ள ஏனைய அணிகளான இலங்கை, தென்கொரியா, துர்க்மெனிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் வடகொரிய அணியின் விலகல் குழு H இல் உள்ள ஏனைய அணிகளான தென்கொரியா, துர்க்மெனிஸ்தான், லெபனான் ஆகிய நாடுகளுக்கு, கால்பந்து உலகக் கிண்ணத்திற்கு தெரிவாகும் வாய்ப்பினை அதிகரித்திருக்கின்றது.  

இதேவேளை, இலங்கை கால்பந்து அணி உலகக் கிண்ணத் தொடருக்கான ஆசியப் பிராந்திய அணிகளை தெரிவு செய்கின்ற இந்த தகுதிச் சுற்றில் தாம் விளையாடிய 5 போட்டிகளிலும் படுதோல்வியடைந்து உலகக் கிண்ணத்திற்கு தெரிவாகும் வாய்ப்பினை ஏற்கனவே இழந்திருப்பது குறிப்பிட வேண்டிய விடயமாகும். அதேநேரம், இலங்கை அணியின் குழுவில் துர்க்மெனிஸ்தான் 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Video – 2020/21 LA LIGA கிண்ணத்திற்கான மோதலில் 4 அணிகள் !| FOOTBALL ULAGAM

தற்போது பல நாடுகளிலும் கொவிட் 19 வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால், குறித்த தகுதிகாண் போட்டிகளின் H குழுவிற்கான எஞ்சிய போட்டிகள் அனைத்தும் நடுநிலை மைதானத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி, இக்குழுவில் எஞ்சியுள்ள 5 போட்டிகளும் எதிர்வரும் ஜுன் மாதம் 5ஆம், 9ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் தென் கொரியாவின் கொயங் நகரில் உள்ள கொயங் அரங்கில் இடம்பெறவுள்ளன. 

இதில், இலங்கை அணி ஜுன் 5ஆம் திகதி லெபனான் அணியையும், ஜுன் 9ஆம் திகதி தென் கொரிய அணியையும் எதிர்கொள்ளவுள்ளன. 

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளுக்கு அமைய புள்ளிப் பட்டியல் 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…