உபாதை நீங்கி மீண்டும் தென்னாபிரிக்க அணியில் பவுமா

134
Temba Bavuma

இந்தியாவுக்கு எதிராக நவம்பர் 14ஆம் திகதி கொல்கத்தாவில் தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க அணிக் குழாம் தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை (CSA) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

>>இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மலேசிய மகளிர் கிரிக்கெட் அணி<<

கடந்த மாதம் இங்கிலாந்து தொடரின் போது இடது காலில் காயம் ஏற்பட்டதால், பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாபிரிக்கா விளையாடிய டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா பங்கேற்காது போயிருந்தார்.  இந்த நிலையில்,  எய்டன் மாக்ரம் அணியை வழிநடத்தினார். பாகிஸ்தான் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்திருக்க, தற்போது காயம் முழுவதுமாகக் குணமாகியதனால், பவுமா இந்திய தொடரில் தென்னாபிரிக்க அணித் தலைவராக மீண்டும் பொறுப்பேற்கின்றார்.

அதேநேரம் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர்களான கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர் மற்றும் செனுரன் முத்துசாமி ஆகியோருக்கும் இந்திய டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பாகிஸ்தான் தொடரில் இருந்த டேவிட் பெடிங்ஹாம், ப்ரெனலன் சுப்ராயன் இந்திய தொடருக்கான குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்கா டெஸ்ட் குழாம்

 

டெம்பா பவுமா (அணித் தலைவர்), எய்டன் மாக்ரம், ரியான் ரிக்கெல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன், டிவால்ட் பிரேவிஸ், சுபைய்ர் ஹம்சா, டோனி டி சோர்சி, கோர்பின் போஸ்ச், வியான் முல்டர், மார்கோ ஜான்சென், கேசவ் மஹாராஜ், செனுரன் முத்துசாமி, ககிஸோ றபாடா, சைமன் ஹார்மர்.

தொடர் அட்டவணை

  • முதல் டெஸ்ட்: நவம்பர் 14 – 18, கொல்கத்தா
  • இரண்டாவது டெஸ்ட்: நவம்பர் 22 – 26, குவஹாட்டி

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<