பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக வேகப்பந்துவீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் அணியின் தலைவராக மொஹமட் ரிஸ்வான் செயற்பட்டுவந்த நிலையில், அவருக்கு பதிலாக சஹீன் ஷா அப்ரிடி தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.
த்ரில் முடிவுடன் மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு முதல் வெற்றி
சஹீன் ஷா அப்ரிடி ஏற்கனவே பாகிஸ்தான் T20I அணியின் தலைவராக செயற்பட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இவர் தலைவராக செயற்பட்டிருந்த போதும், கடைசி போட்டியில் மாத்திரம் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து சஹீன் ஷா அப்ரிடி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாபர் அஷாம் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டிருந்த மொஹமட் ரிஸ்வானின் தலைமையில் பாகிஸ்தான் அணியின் சிறப்பான ஆரம்பத்தை பெற்றிருந்த போதும், அதனை தொடர்ந்து ஏற்பட்ட தொடர் தோல்விகள், பிரகாசிப்பின்மை மற்றும் சம்பியன்ஷ் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் தோல்விகள் காரணமாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மைக் ஹெஷனுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் சஹீன் அப்ரிடி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















