2025ஆம் ஆண்டு இலங்கையின் மெய்வல்லுனர் போட்டிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இத்தாலியில் யுபுன் அபேகோனும், ஐக்கிய அமெரிக்காவில் தருஷி கருணாரட்னவும் வெற்றிகளைப் பதிவு செய்தனர்.
இதில் கடந்த வெள்ளிக்கிழமை (17) அமெரிக்காவின் Tennessee இல் நடைபெற்ற Vanderbilt Indoor Invitational 2025 மெய்வல்;லுனர் போட்டியில் Tulane பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரட்ன களமிறங்கினார்.
ஐந்து சுற்றுக்களாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் போட்டியை 2 நிமிடங்கள் 49.04 செக்கன்களில் நிறைவு செய்த அவர் ஏழாவது இடத்தைப் பிடித்தார். எவ்வாறாயினும், 5 சுற்றுகளின் முடிவில் 42 வீராங்கனைகளில் 7ஆவது இடத்தையே அவரால் பெற்றுக்கொள்ள முடிந்தது.
அதேபோல, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் 3ஆவது தகுதிச் சுற்றில் பங்குகொண்ட அவர், போட்டியை 54.51 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
- விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக சுகத் திலகரட்ன நியமனம்
 - சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனரில் சந்துன், டில்னி சிறந்த வீரர்களாக முடிசூடல்
 - புது வரலாறு படைத்த ஒமெல்; கஜானன், கமில்டன், ஜதுர்சிகாவுக்கு முதல் பதக்கம்
 
இலங்கைக்கு அண்மைக்காலமாக மத்திய மற்றும் நெடுந்தூரப் போட்டிகளில் பல சர்வதேச வெற்றிகளை ஈட்டிக் கொடுத்த தருஷி கருணாரட்ன, மெய்வல்லுனர் போட்டிகளில் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கடந்த ஆண்டு மேலதிக கல்விக்காக அமெரிக்காவிற்குச் சென்றார்.
இதற்கிடையே இத்தாலியில் நேற்று (18) நடைபெற்ற 4th Memorial Alessio Giovannini மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற யுபுன் அபேகோன், 6.68 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 4ஆவது இடத்தைப் பிடித்தார். எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றை அவர் 6.70 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார்.
எவ்வாறாயினும், 2 சுற்றுகளைக் கொண்டதாக நடைபெற்ற இப்போட்டியில் மொத்தமாக 14 வீரர்கள் பங்கேற்றததுடன், யுபுன் அபோகோனுக்கு நான்காவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<



















