பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு

Sri Lanka Women’s Team Tour of Pakistan 2022

138

பாகிஸ்தான் தொடருக்கான 15 பேர்கொண்ட மகளிர் குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (11) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை மகளிர் அணியானது எதிர்வரும் 19ம் திகதி பாகிஸ்தான் தொடருக்காக புறப்படவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட மகளிர் ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட மகளிர் T20I தொடர்களில் இலங்கை அணி விளையாடவுள்ளது.

>>இந்த இலங்கை வீரர்களை உலகக் கிண்ணத்தில் எதிர்பார்க்கலாம் – மஹேல ஜயவர்தன

குறித்த இந்த தொடருக்கான 15  பேர்கொண்ட இலங்கை குழாத்தின் தலைவியாக, இலங்கையின் முன்னணி சகலதுறை வீராங்கனையான சாமரி அதபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருடன் முன்னணி வீராங்கனைகள் இந்த குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். அதுமாத்திரமின்றி பெயரிடப்பட்டுள்ள இந்த குழாத்தில் இலங்கையில் இறுதியாக நடைபெற்ற மகளிருக்கான உள்ளூர் கழகமட்ட போட்டிகளில் பிரகாசித்த பல வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ள 15 வீராங்கனைகள் கொண்ட குழாத்துடன்,  மேலதிக 5 வீராங்கனைகளும் பாகிஸ்தான் தொடருக்காக அங்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம் – சாமரி அதபத்து (தலைவர்), ஹாஸினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, இமேஷா டுலானி, பிரசாதி வீரகொடி, நிலக்ஷி டி சில்வா, கவீஷா டில்ஹாரி, அமா காஞ்சனா, அச்சினி குலசூரிய, இனோகா ரணவீர, உதேசிகா பிரபோதனி, சுகந்திகா குமாரி, சச்சினி நிசன்சலா, ஓசதி ரணசிங்க, அனுஷ்கா சஞ்சீவனி

மேலதிக வீராங்கனைகள் – காவ்யா கவிந்தி, ரஷ்மி டி சில்வா, சத்யா சந்தீபனி, மல்ஷா செஹானி, தாரிகா செவ்வந்தி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<