ஆறு வருடங்களுக்கு பின் பிக் பேஷ் லீக்கில் மிச்சல் ஸ்டார்க்!

176

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க், 6 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் பிக் பேஷ் லீக் (BPL) தொடரில் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிக் பேஷ் லீக் தொடரானது, அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்குடையிலான தொடர் காலப்பகுதியில் நடைபெறுவதன் காரணமாக சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் இறுதி மூன்று போட்டிகளிலும் ஸ்டார்க் விளையாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ள மொஹமதுல்லாஹ்!

பிக்பேஷ் லீக்கில் விளையாடவுள்ளமை தொடர்பில் மிச்சல் ஸ்டார்க் குறிப்பிடுகையில், “நான் கடந்த காலங்களாக பிக் பேஷ் லீக்கை பார்த்து வருகின்றேன். இந்த ஆண்டு விளையாடவுள்ளதுடன், சிறந்த வீரர்களுடன் போட்டிகளில் விளையாடவுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இதுவொரு மிகச்சிறந்த தருணமாகும். அனைவரும் விரும்பும் அல்லது எதிர்பார்க்கும் அளவுக்கு இம்முறை பிக் பேஷ் லீக் நடைபெறும் என நான் சிந்திக்கிறேன்” என்றார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், “நான் கடந்த ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஸ் ஹெஷல்வூட் ஆகியோர் விளையாடுவதை பார்வையிட்டேன்.  தொடர்ந்து கழகத்துடன் தொடர்புடன் இருந்ததில், சிட்னி அணிக்காக விளையாடும் சிறிய வாய்ப்பு கிடைத்தது. அதேநேரம், என்னுடைய நெருங்கியிருந்த வீரர்கள் சிலர் அணியில் விளையாடுகின்றனர். அதேநேரம், சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் வெற்றிக்கு பின்னால் பல முக்கியனமாவர்களும் உள்ளனர்” என சுட்டிக்காட்டினார்.

மிச்சல் ஸ்டார்க் பிக் பேஷ் லீக்கில் இதுவரை 10 போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள நிலையில், 20 விக்கெட்டுகளை 7.92 என்ற ஓட்ட விகிதத்தில் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜொனி பெயார்ஸ்டோவ், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக முதன்முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், இம்முறை பிக் பேஷ் லீக்கில் இணையும் 10வது இங்கிலாந்து வீரராகவும் பெயார்ஸ்டோவ் உள்ளார். இவர், தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடர் நிறைவடைந்த பின்னர், அணியுடன் இணைவார் என குறிப்பிட்ப்பட்டுள்ளது.

Video – பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி தந்த Zimbabwe | Cricket Galatta Epi 44

இதுதொடர்பில் பெயார்ஸ்டோவ் குறிப்பிடுகையில், “பிக் பேஷ் லீக்கில் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான், தொடர்ந்து பிக் பேஷ் லீக்கை பார்த்து வருகின்றேன். இப்போது, தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்டார்ஸ் அணி, பிக் பேஷ் லீக்கில் தங்களுக்கென ஒரு அடையாளத்தை கொண்டுள்ளது.

அதேநேரம், க்ளேன் மெக்ஸ்வேல், அடம் ஷம்பா மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோருக்கு எதிராக ஐ.பி.எல். தொடரில் விளையாடினேன். இப்போது இவர்களுடன் விளையாடுவதற்கு ஆர்வமாக இருக்கிறேன். கொவிட்-19 வைரஸ் காரணமாக மெல்பேர்னுக்கு கடினமான காலமாக இருந்தது. ஆனால், தற்போது மக்களின் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன்” என்றார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<