நாளாந்தம் உழைப்பவர்களுக்கு உதவ முன்வந்திருக்கும் மஹாநாம, வாஸ் ஜோடி

86

கொரோனா வைரஸினால் இலங்கையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அன்றாட வருமானத்தினை நம்பியிருக்கும் மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  

மக்கள் நாயகனாக மாறியுள்ள இந்தியாவின் உலகக் கிண்ண நாயகன்

இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகக் கிண்ண நாயகனாக சேவை…………

இவ்வாறு, நாளாந்த உழைப்பினை நம்பியுள்ள மக்களுக்கு உதவும் வகையில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹாநாம, சமிந்த வாஸ் ஆகியோர் இணைந்து புதிய திட்டம் ஒன்றினை கொண்டு வந்திருக்கின்றனர். 

Dr. கிரிஷான் தலகாககே என்பவரின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், அன்றாட வருமானத்தினை நம்பியுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளாக இருக்கும் பொருட்கள் கொள்வனவு செய்து கொடுக்கப்படவுள்ளன. 

சமூகத்திற்கு நன்மை பயக்கும் இந்த திட்டத்திற்கு சமிந்த வாஸ்  ரொஷான் மஹாநாம ஆகியோர் பொது மக்களையும் இணையுமாறு கூறியுள்ளதோடு பொது மக்களை அத்தியாவசிய தேவைகளாக இருக்கும் அரிசி, நூடில்ஸ், பருப்பு, மீன்டின், கருவாடு, நெத்தலி, சீனி, மிளகாய், கறித்தூள் மற்றும் பிஸ்கட் ஆகிய பொருட்களை இந்த திட்டத்திற்காக கொடுத்து உதவுமாறும் குறிப்பிட்டிருக்கின்றனர். 

இந்த திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ரொஷான் மஹாநாம, ”(அன்றாட உழைப்பினை நம்பியுள்ள) அவர்களும் எங்களது நாட்டு மக்களே, நாங்கள் அவர்களுக்கு உணவு தராது விடின், வேறு யார் கொடுப்பார்? மாற்றம் ஒன்றுக்காக ஒன்றிணைவோம்.” எனத் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் சமிந்த வாஸ், ”உங்களால் ஏனையோரது வாழ்க்கையில் மாற்றம் ஒன்றினை உருவாக்க முடியும்.” என்றார். 

இந்த நலத் திட்டத்திற்கு உதவ விரும்புவோர் கல்கிசை – இலங்கை வங்கி கட்டடத்தின் இரண்டாம் மாடியில் உள்ள பிரிமியர் ஹெல்த் கெயார் நிறுவனத்தில் அத்தியாவசியப் பொருட்களை கையளிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

37 வயதானாலும் கிரிக்கெட் விளையாடத் தயார்: ஜேம்ஸ் அண்டர்சன்

கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் கிரிக்கெட்டில் ………

அதோடு இலங்கையில் தற்போது ஊரடங்குச் சட்டம் நிலவுவதன் காரணமாக பொருள் உதவி செய்ய முடியாதவர்களிடமிருந்து பண உதவியும் எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. இதற்காக வங்கிக்கணக்கு இலக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

(இலங்கையர்களுக்கு)

கணக்கின் பெயர் – Premier Health & Education

கணக்கு இலக்கம் – 061020401994

வங்கி – HNB 

கிளை – Mount Lavinia

(வெளிநாட்டு சொந்தங்களுக்கு)

வங்கி குறியீடு (Bank Code) – 7083

கிளை குறியீடு (Branch Code) – 061

ஸ்விப்ட் குறியீடு (SWIFT Code) – HBLILKLX

மேலதிக விபரங்களுக்கு

  • Dr. ஜனித் – 077 658 8444
  • Dr. திமால் – 077 800 6095
  • Dr. பப்சார – 076 689 8822
  • Dr. ஹிருனி – 071 972 1021
  • Dr. திவ்யா – 077 662 6901

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<