ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுள்ளது.
சுற்றுலா இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது..
நேற்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 362 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்று ஆட்டத்தை தொடர்ந்த ஜிம்பாப்வே அணி, மதியபோசன இடைவேளைக்கு முன்னர் 406 ஓட்டங்களை குவித்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜிம்பாப்வே அணி சார்பாக சேன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 107 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, சிக்கண்டர் ரசா 72 ஓட்டங்களையும், ப்ரெண்டன் டெய்லர் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இன்றைய தினம், டினோடெண்டா முடொம்போட்ஷி 33 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, லசித் எம்புல்தெனிய 4 விக்கெட்டுகளை வீழ்த்த, தனன்ஜய டி சில்வா 3 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி, மதியபோசன இடைவேளையின் போது, விக்கெட்டிழப்பின்றி 6 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு, தொடர்ந்து துடுப்பாட்டத்தை நகர்த்தியது.
இதில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும், 94 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், திமுத் கருணாரத்ன, சிக்கண்டர் ரசாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த குறுகிய நேரத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய ஓசத பெர்னாண்டோவும் விக்கெட்டினை பறிகொடுத்தார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் மீண்டும் இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். எனினும், மைதானத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
இன்றைய ஆட்டநேரம் நிறைவுக்கு கொண்டுவரப்படும் போது, இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் தலா 44 ஓட்டங்களையும் பெற்ற நிலையில், குசல் மெண்டிஸ் 19 ஓட்டங்களையும் அஞ்செலோ மெதிவ்ஸ் 4 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் சிக்கண்டர் ரசா மற்றும் டொனால்ட் டிரிபானோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதேவேளை, இலங்கை அணியானது ஜிம்பாப்வே அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை எட்டுவதற்கு இன்னும் 284 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
Result
Match drawn
Sri Lanka
293/10 (119.5) & 204/3 (87)
Zimbabwe
406/10 (115.3) & 247/7 (75)
Batsmen
R
B
4s
6s
SR
Prince Masvaure
c Niroshan Dickwella b Lahiru Kumara
9
44
1
0
20.45
Kevin Kasuza
b Suranga Lakmal
38
97
4
0
39.18
Craig Ervine
c Oshada Fernando b Dhananjaya de Silva
12
11
1
1
109.09
Brendan Taylor
lbw b Suranga Lakmal
62
62
10
1
100.00
Sean Williams
b Dhananjaya de Silva
107
137
10
3
78.10
Sikandar Raza
c Angelo Mathews b Lasith Embuldeniya
72
99
4
2
72.73
Regis Chakabva
c Niroshan Dickwella b Lasith Embuldeniya
31
69
3
0
44.93
Tinotenda Mutombodzi
lbw b Dhananjaya de Silva
33
99
4
0
33.33
Donald Tiripano
c Suranga Lakmal b Lasith Embuldeniya
13
47
1
0
27.66
Carl Mumba
not out
11
19
2
0
57.89
Victor Nyauchi
c Dhananjaya de Silva b Lasith Embuldeniya
6
10
1
0
60.00
Extras
12 (b 8 , lb 3 , nb 1, w 0, pen 0)
Total
406/10 (115.3 Overs, RR: 3.52)
Fall of Wickets
1-21 (13.6) Prince Masvaure, 2-49 (19.4) Craig Ervine, 3-114 (32.6) Kevin Kasuza, 4-133 (36.5) Brendan Taylor, 5-292 (71.6) Sikandar Raza, 6-324 (78.5) Sean Williams, 7-362 (95.2) Regis Chakabva, 8-386 (110.1) Tinotenda Mutombodzi, 9-394 (111.6) Donald Tiripano, 10-406 (115.3) Victor Nyauchi,