துருக்கி கழகத்தை பந்தாடிய ரியல் மெட்ரிட்: சிட்டி, ஜுவன்டஸ், PSG அடுத்த சுற்றில்

81

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (07) அதிகாலை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, 

ரியல் மெட்ரிட் எதிர் கலடசராய் 

பதின்ம வயது வீரர் ரொட்ரிகோ பெற்ற ஹட்ரிக் கோல் உதவியுடன் கலடசராய் அணியை பந்தாடிய ரியல் மெட்ரிட் 6-0 என  போட்டியை வென்றது.

அதிரடியாக போட்டியை சமன் செய்த செல்சி: பார்சிலோனா ஏமாற்றம்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் ……….

தனது சொந்த மைதானமான மெட்ரிட்டின் சன்டியாகோ பெர்னபுவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 4ஆவது நிமிடத்தில் பிரேசிலின் 18 வயதுடைய ரொட்ரிகோ எதிரணி பின்கள வீரர்களை முறியடித்து மின்னல் வேகத்தில் கோல் புகுத்தினார். 

இரண்டு நிமிடங்கள் கழித்து அவர் மற்றொரு கோலை புகுத்த 13 தடவைகள் ஐரோப்பிய சம்பியன்ஸ் பட்டத்தை வென்றிருக்கும் ரியல் மெட்ரிட் எந்த நெருக்கடியும் இன்றி முன்னேற்றம் கண்டது. 

துருக்கிக் கழகமான கலடசராய் தடுமாற்றம் காண்டதால் ரியல் மெட்ரிட் அடுத்தடுத்து கோல்களை பெற முதல் பாதி ஆட்டம் முடிவதற்குள் 4-0 என்ற கோல்கள் பதிவானது. 

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்தி ரியல் மெட்ரிட்டுக்காக கரிம் பென்சமா 81ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலையும் புத்தினார்.

தொடர்ந்து போட்டியின் மேலதிக நேரத்தில் வைத்து ரொட்ரிகோ தனது ஹட்ரிக் கோலை பூர்த்தி செய்தார். 

இதன்படி ரியல் மெட்ரிட் ஜம்பவான் ராவுலுக்கு அடுத்து சம்பியன்ஸ் லீக்கில் ஹட்ரிக் கோல் பெற்ற இளம் வீரராக ரொட்ரிகோ பதிவானார்.  

தனது A குழுவின் முதல் இரு போட்டிகளிலும் ஒரு புள்ளியை மாத்திரம் பெற்றிருந்த ரியல் மெட்ரிட் தற்போது 7 புள்ளிகளுடன் பரிஸ் செயின்ட் ஜெர்மைனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 

மன்செஸ்டர் சிட்டி எதிர் அடலண்டா

பரபரப்பாக நடந்த C குழு போட்டியில் அடலண்டா அணிக்கு எதிராக மன்செஸ்டர் சிட்டி 1-1 என சமநிலையுடன் ஆறுதல் பெற்றது. 

போட்டியின் ஏழாவது நிமிடத்திலேயே ரஹீம் ஸ்டர்லின் பெனால்டி பகுதிக்கு பந்தை பெற்று அதனை நேர்த்தியாக கோலாக மாற்றி சிட்டி அணிக்கு சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொடுத்தார். 

எனினும் காப்ரியல் ஜேசுஸ் பெனால்டி ஒன்று தவறவிட்டதற்கு சிட்டி அணி பெரும் விளைவை சந்திக்க நேர்ந்தது. இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவிலேயே அலெஜன்ட்ரோ கோமஸ் பரிமாற்றிய பந்தைக் கொண்டு மாரியோ பசலிக் பதில் கோல் திருப்பினார்.  

இந்தப் போட்டி சமநிலை பெற்றபோதும் மன்செஸ்டர் சிட்டி தனது குழுவில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துவதோடு கடைசி 16 அணிகளுக்கு முன்னேறியுள்ளது. 

ஜுவன்டஸ் எதிர் லொகொமோடிவ் மொஸ்கோ

லொகொமோடிவ் அணிக்கு எதிராக மேலதிக நேரத்தில் கோல் புகுத்தி  2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜுவன்டஸ் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.     

கட்டாருக்கு எதிராக அபார தடுப்புக்களை மேற்கொண்ட முர்ஷித்

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ………….

கிறிஸ்டியானோ ரெனால்டோ உதைத்த ப்ரீ கிக் லொகொமோடிவ் கோல்காப்பளரிடம் பட்டு வர அதனை ஜுவன்டஸ் அணிக்காக கோலாக மாற்றினார் ஆரோன் ரம்சி. இதன்மூலம், 3ஆவது நிமிடத்திலேயே ஜுவன்டஸ் முன்னிலை பெற்றபோதும் அடுத்த எட்டு நிமிடங்களில் அலெகசாய் மிரன்சுக் பதில்கோல் திருப்பியதால் போட்டியில் பரபரப்பு அதிகரித்தது.  

போட்டி சமநிலையை நோக்கி செல்லும் நிலையில் 93ஆவது நிமிடத்தில் டக்லஸ் கொஸ்டா பெற்ற கோல் மூலம் ஜுவன்டஸ் வெற்றியை உறுதி செய்துகொண்டது. 

PSG எதிர் கிளப் பிரகஸ்

பிரகஸ் அணிக்கு எதிரான A குழு போட்டியில் ஆரம்பத்திலேயே கோல் பெற்ற பரிஸ் செயிட் ஜெர்மைன் (PSG) அணி சம்பியன்ஸ் லீக் கடைசி 16 அணி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.   

பிரான்ஸ் சம்பியன் அணியான PSG மவுரோ இகர்டி மூலம் 21ஆவது நிமிடத்திலேயே கோல் பெற்றதோடு அதுவே அந்த அணியின் வெற்றி கோலாகவும் இருந்தது. 

தியாகோ சில்வா இரண்டாவது பாதியில் பெனால்டி ஒன்றை விட்டுக்கொடுத்தபோதும் ம்பயே ட்யக்னே உதைத்த பந்தை கைலோர் நவாஸ் தடுத்தார். 

அடுத்து ரியல் மெட்ரிட்டை சந்திக்கவிருக்கும் PSG அந்தப் போட்டியிலும் வென்றால் தனது குழுவில் முதலிடத்தை உறுதி செய்யும். 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<