டி-20 அணியிலிருந்து மெதிவ்ஸ் நீக்கம்: மறுக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர்

1309

நியூசிலாந்து அணிக்கெதிராக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க வீரரான அஞ்செலோ மெதிவ்ஸுக்கு ஓய்வு வழங்குவதற்கு தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.   

இலங்கை பாகிஸ்தான் செல்வது உறுதி : போட்டி அட்டவணை வெளியானது!

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம்…

இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கெதிரான டி-20 தொடரில் மெதிவ்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக தனக்கு இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, போர்மில் உள்ள அவரை டி-20 அணியில் இருந்து நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.  

விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் இருந்து இலங்கை அணியின் அனுபவமிக்க வீரரான அஞ்செலோ மெதிவ்ஸுக்கு ஓய்வளிக்கப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்

நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெறவுள்ள டி-20 தொடருக்கான 24 பேர் கொண்ட உத்தேச குழாமொன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அஞ்செசலோ மெதிவ்ஸின் பெயர் இடம்பெறவில்லை என்பதையும் நான் பத்திரிகை மூலம் அறிந்து கொண்டேன். ஆனால் அவ்வாறான எந்தவொரு கடிதமும் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.  

அதேபோல, அஞ்செலோ மெதிவ்ஸ் என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு தன்னை டி-20 குழாத்தில் இணைத்துக்கொள்ளவில்லை என கூறவும் இல்லை. பொதுவாக உத்தேச குழாமொன்றுக்கான பெயர் பட்டியலில் கிடைக்கப் பெற்றவுடன் அதில் இடம்பெற்றுள்ள மற்றும் இடம்பெறாத வீரர்கள் தொடர்பில் தேர்வுக் குழுவின் தலைவரிடம் கேட்போம்

ஒருநாள் போட்டியில் விளையாட பாகிஸ்தான் செல்கிறது இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு…

எதுஎவ்வாறாயினும், எனக்கு இதுவரை டி-20 தொடருக்கான உத்தேச குழாத்தின் பெயர் கிடைக்கவில்லை. அந்த கடிதம் கிடைத்தவுடன் பார்ப்போம். ஆனாலும், அஞ்செலோ மெதிவ்ஸ் தற்போது போர்மில் இருப்பதால் அவரை கட்டாயம் அணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

 நான் கண்கள் இரண்டும் தெரியாத குருடன் அல்ல. நானும் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் விரும்பிப் பார்க்கிறேன். எனது அபிப்ராயத்தையும் நான் முன்வைப்பேன். அதற்கு தேர்வுகுழு உறுப்பினர்கள் பல காரணங்களை முன்வைப்பார்கள்.  

எனவே மெதிவ்ஸ் தற்போது போர்மில் இருப்பதால் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதேபோல, எமது டி-20 அணியை இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியாக மாற்ற முடியுமானால் நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்

Video – அகில தனன்ஜய மீதான குற்றச்சாட்டு இலங்கை அணியை பாதிக்குமா? : Cricket Kalam 27

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி…

உதாரணமாக ஷெஹான் ஜயசூரிய, தசுன் ஷானக்க மற்றும் வனிந்து ஹசரங்க போன்ற வீரர்கள் அண்மைக்காலமாக சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்களுக்கு கட்டாயம் டி-20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும்

எனினும், நான் பயிற்சியாளரோ, தேர்வுக் குழு உறுப்பினரோ கிடையாது. எனவே அணித் தேர்வு குறித்து விளையாட்டுத்துறை அமைச்சராகப் பேசுவது தவறாகும். ஆனாலும், உங்களது ஒரு நண்பனாக இதைப் பார்த்தால் நானும் டி-20 கிரிக்கெட் போட்டிகளை விரும்பி பார்ப்பேன். அதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் இன்னும் நன்றாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்

இதேவேளை, நியூசிலாந்து அணிக்கெதிரான டி-20 தொடரில் லசித் மாலிங்க விளையாடுவாரா என்பது தொடர்பில் இதுவரை உறுதியாகாத நிலையில், இலங்கை அணியை நிரோஷன் டிக்வெல்ல அல்லது குசல் ஜனித் பெரேரா வழிநடத்தலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<