சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவை இடையே நடைபெற்று வரும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டத்தில் அயர்லாந்து A அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக இமாலய ஓட்ட எண்ணிக்கையை குவித்து வலுப்பெற்றுள்ளது.
முன்வரிசை வீரர்களின் அரைச்சதங்களோடு வலுப்பெற்றுள்ள அயர்லாந்து A அணி
சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி, ஆகியவைக்கு…
நேற்று (13) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த நான்கு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த அயர்லாந்து A அணி, போட்டியின் முதல் நாள் ஆட்டம் காலநிலை சீர்கேட்டினால் தடைப்படும் பொழுது 286 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து ஸ்திர நிலையில் காணப்பட்டிருந்தது. அயர்லாந்து A அணியினை துடுப்பாட்டத்தில் வலுப்படுத்திய லோர்கன் டக்கர் 61 ஓட்டங்களுடனும், நெயில் ரொக் 57 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.
இன்று (14) போட்டியின் இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த அயர்லாந்து A அணி, இரண்டாம் நாளின் முதல் விக்கெட்டாக லோர்கன் டக்கரின் விக்கெட்டினை இலங்கை A அணித்தலைவர் அஷான் பிரியன்ஞனின் பந்துவீச்சில் பறிகொடுத்தது. அயர்லாந்து A அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக 168 ஓட்டங்களை நெயில் ரொக்குடன் இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த லோர்கன் டக்கர் 8 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.
இதன் பின்னர், சிறிது நேரத்தில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நெயில் ரொக்கின் விக்கெட்டினையும் அயர்லாந்து A அணி இழந்தது. நெயில் ரொக் லசித் அம்புல்தெனியவின் சுழலில் பெதும் நிஸ்ஸங்கவிடம் பிடிகொடுத்து 85 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.
BPL தொடரில் தனது முதல் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த திசர பெரேரா
நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 என மூவகைப் போட்டிகள்…
இதனையடுத்து அயர்லாந்து A அணி, துடுப்பாட்டத்தில் சற்று தடுமாறிய போதிலும் பின்வரிசையில் களம் வந்த ஜொனதன் கார்த் மற்றும் ஜேம்ஸ் கெமரூன் டோவ் ஆகியோர் தமது தரப்பினை தாங்கிப்பிடித்தனர். அதன்படி, ஜொனதன் கார்த் 45 ஓட்டங்களை குவிக்க, ஜேம்ஸ் கெமரூன் டோவ் ஆட்டமிழக்காமல் அரைச்சதம் ஒன்று தாண்டி 76 ஓட்டங்களுடன் பலம் சேர்த்திருந்தார்.
இந்த பின்வரிசை வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு அயர்லாந்து A அணி, தமது முதல் இன்னிங்ஸில் 508 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.
இலங்கை A அணியின் பந்துவீச்சில் சாமிக்க கருணாரத்ன மற்றும் லசித் அம்புல்தெனிய ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதமும், அஷான் பிரியன்ஞன் மற்றும் மொஹமட் சிராஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
இதன் பின்னர், தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை A அணி, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் 23 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
Photos: Velanai Vengaikal vs Kokuvil Stars | Jaffna Super League 2018 | #Match 3
ThePapare.com | Surenthirakumar Kangalingam | 14/01/2019 Editing and re-using…
இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் நிற்கும் அஞ்செலோ பெரேரா அரைச்சதம் ஒன்றுடன் (50*) களத்தில் உள்ளார். இதேநேரம், அயர்லாந்து A அணியின் பந்துவீச்சில் கிரைக் யங் 2 விக்கெட்டுக்களையும் ஜொனதன் கார்த் ஒரு விக்கெட்டினையும் சாய்த்திருந்தனர்.
தற்போது அயர்லாந்து A அணியினை விட 409 ஓட்டங்களால் பின்தங்கிக் காணப்படும் இலங்கை A அணி போட்டியின் நாளைய மூன்றாம் நாளில், 7 விக்கெட்டுக்கள் கைவசமிருக்க தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடரவிருக்கின்றது.
ஸ்கோர் விபரம்
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க




















