துனித்தின் அபார சதத்துடன் புனித செபஸ்தியன் கல்லூரி அரையிறுதிக்குள்

340
Singer U17 Cricket

சிங்கர் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவு – 1 பாடசாலை கிரிக்கெட் தொடரில் இன்று (29) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியினை பதிவுசெய்த மொறட்டுவ புனித செபஸ்தியன் கல்லூரி அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டது.

அத்துடன், இறுதிப் பந்து வரை விறுவிறுப்பாகச் சென்ற புனித தோமியார் கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரிகளுக்கிடையிலான போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

இலகுவாக அரையிறுதிக்கு முன்னேறிய மஹிந்த, ஜோசப் கல்லூரிகள்

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1..

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு – 1 பாடசாலை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கான வாய்ப்பை பெறுவதற்கான போட்டிகள் இரண்டு இன்று நடைபெற்றன.

இதில் மொறட்டுவ புனித செபஸ்தியன் கல்லூரி அணி, வத்தளை புனித அந்தோனியார் கல்லூரியை கொழும்பு றோயல் கல்லூரி மைதானத்தில் எதிர்கொண்டது. இதேவேளை, கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மற்றுமொரு காலிறுதிப் போட்டியில் கொழும்பு நாலந்த கல்லூரி அணி, கல்கிஸை தோமியார் கல்லூரி அணியுடன் மோதியது.

கொழும்பு நாலந்த கல்லூரி எதிர் தோமியர் கல்லூரி, கல்கிஸை

கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனித தோமியர் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி ஆடிய புனித தோமியார் கல்லூரி அணி, ஆரம்பத்தில் நேர்த்தியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், பின்னர், தடுமாற்றமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 33.3 ஓவர்களில் 113 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர்.

புனித தோமியார் கல்லூரி அணி சார்பில் மொஹமட் இசாக் 21 ஓட்டங்களையும், கிஷான் முனசிங்க 20 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் நாலந்த கல்லூரி அணியின், லக்ஷான் மாயாதுன்ன 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு நாலந்த கல்லூரி அணி வெற்றியை நோக்கி சிறப்பாக முன்னேறியது. ஓட்டங்கள் இன்றி ஆரம்ப விக்கெட்டை இழந்த நிலையிலும், செஹானின் 29 ஓட்டங்களின் உதவியுடன் 3 விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களை பெற்று, வலுவான நிலையில் இருந்தது.

எனினும் புனித தோமியார் கல்லூரியின் ரந்திவ் குணசேகரவின் பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறிய நாலந்த கல்லூரி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன்படி 21.2 ஓவர்களில் 63 ஓட்டங்ளுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நாலந்த அணி வெற்றிக்கான வாய்ப்புகளை இழக்கும் தருவாயில் இருந்தது.

மெண்டிஸ், ராஜிதவின் சிறப்பாட்டத்தால் காலி அணிக்கு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை மாகாண அணிகளுக்கு இடையில் ஒழுங்கு செய்து நடாத்தி..

எவ்வாறாயினும் மெதுவாக ஓட்டங்களை சேர்க்கத் தொடங்கிய பின்வரிசை வீரர்கள் அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினர். இறுதி பந்துவரை போராடிய நாலந்த கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை பெற்றதுடன், போட்டியை சமப்படுத்தியது.

அணிக்காக இறுதிவரை ஆட்டமிழக்காமல் போராடிய தமிந்து கமலசூரிய 81 பந்துகளுக்கு 18 ஓட்டங்களை பெற்று அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினார். தோமியார் கல்லூரியின் பந்து வீச்சில் ரந்திவ் குணசேகர 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதேவேளை, இரண்டு அணிகளும் 113 ஓட்டங்களை பெற்று போட்டியை சமப்படுத்திய காரணத்தால், அரையிறுதிக்கான அணி இன்றைய தினம் தெரிவுசெய்யப்படவில்லை. இதனால் நாளை அல்லது மற்றுமொரு தினத்தில் இந்த போட்டியை மீண்டும் விளையாடுவதற்கு நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.


வத்தளை அந்தோனியார் கல்லூரி எதிர் செபஸ்தியன் கல்லூரி, மொறட்டுவ

கொழும்பு றோயல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரியை எதிர்கொண்ட, மொறட்டுவ புனித செபஸ்தியன் கல்லூரி, துனித் ஜயதுங்கவின் அபார சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனித செபஸ்தியன் கல்லூரி அணி களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.

இதன்படி முதலாவதாக சிங்கர் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு – 1 பாடசாலை கிரிக்கெட் காலிறுதிக்கு முன்னேறிய புனித அந்தோனியார் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. துடுப்பாட்டத்தில் சற்று சிறப்பாக செயற்பட்ட அந்தோனியார் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து, 207 ஓட்டங்களை பெற்றது.

மாலிங்கவுக்கு வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய சச்சின் டெண்டுல்கர்

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு இந்திய….

அவ்வணி சார்பில் அதிகபட்சமாக ரொமேஷ் சுரங்க 38 ஓட்டங்களையும், அவி்ஷ்க சுராங்க 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, மலிந்து ரங்கன 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய புனித செபஸ்தியன் கல்லூரி அணிக்கு துனித் ஜயதுங்க மற்றும் செவிந்து ரொட்ரிகோ ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர். செவிந்து ரொட்ரிகோ 43 ஓட்டங்களுன் ஆட்டமிழக்க, சுகித பிரசன்னவுடன் இணைந்த துனித் ஜயதுங்க சதம் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதன்படி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த புனித செபஸ்தியன் கல்லூரி 44.3 ஓவர்களில் 210 ஓட்டங்களை பெற்று, வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய துனித் ஜயதுங்க ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் சுகித பிரசன்ன ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களை குவித்தார்.

இதனடிப்படையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்ட புனித செபஸ்தியன் கல்லூரி அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டது.

இதேவேளை சிங்கர் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு – 1 பாடசாலை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கான வாய்ப்பை காலி மகிந்த கல்லூரி மற்றும் கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி ஆகியன தக்கவைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<