அனித்தாவின் தேசிய சாதனையை முறியடிப்பு: ஆஷிக்கிற்கு தங்கம்

The 98th National Athletics Championship Day 2 Report - Tamil

145

கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்றுவரும் 98வது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் இரண்டாவது நாள் போட்டிகளில், மகளிருக்கான கோலூன்றி பாய்தலில் யாழ் வீராங்கனை அனித்தா ஜெகதீஸ்வரனின் தேசிய சாதனை முறியடிக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண வீரர் ஆஷிக் தட்டெறிதலில் தங்கப் பதக்கம் சென்றார்.

இரண்டாவது நாளான இன்று ஆண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல், பெண்களுக்கான 5000 மீற்றர், பெண்களுக்கான தட்டெறிதல், சட்டவேலி ஓட்டம் ஆகியவற்றின் இறுதிப்போட்டிகள் நடைபெற்றன

>> 200 மீற்றரில் வெள்ளிப்பதக்கம் வென்ற சபான்! : சாரங்கி தேசிய சாதனை

5000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டம்

நேற்றைய தினம் 5000 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற புஷ்பகுமார, இன்றைய தினம், U.B. ஹேரத்தால் தோற்கடிக்கப்பட்டார். ஹேரத் போட்டித்தூரத்தை 9:0:22 நிமிடங்களில் நிறைவுசெய்ய, புஷ்பகுமார 9:0:49 நிமிடங்களில் போட்டித்தூரத்தை கடந்தார்

5000 மீற்றர் (பெண்கள்)

தெற்காசியப் போட்டிகளில் வெண்கலம் வென்ற நிலாந்தி லங்கா இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். இவர் போட்டித் தூரத்தை 17:13:24 நிமிடங்களில் நிறைவுசெய்தார். இரண்டாவது இடத்தை விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்திய K.M மலிந்த (17:39:12) பிடித்துக்கொண்டார்

தட்டெறிதல்

ஆண்களுக்கான தட்டெறிதலில்  போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கிழக்கு மாகாண வீரர் ZTM ஆஷிக் 48.78 மீற்றர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார். இந்தப் போட்டியில் S.M.A.M.P. சபரமது 43.59 மீற்றம் தூரத்தை வீசி இரண்டாம் இடத்தையும், H.M.P.A.D.A. ரத்னாயக்க 43.47 மீற்றர் தூரத்தை வீசி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டர்.

M.P பெரேரா பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 38.69 மீற்றர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொண்டதுடன், இரண்டாவது இடத்தை சொனாலி வீரசேகர (38.28) பிடித்துக்கொண்டார்

800 மீற்றர்

முன்னாள் சாதனையாளர்களான கயாந்தி அபேரத்ன மற்றும் நிமாலி லியனாராச்சி ஆகியோரை பின்தள்ளி டில்ஷி குமாரசிங்க தங்கம் வென்றார்.

டில்ஷி குமாரசிங்க போட்டித்தூரத்தை 2:2:80 நிமிடங்களில் நிறைவுசெய்ய, லியனாராச்சி 2:3:20 நிமிடங்களிளும், அபேரத்ன 2:3:59 நிமிடங்களிளும் நிறைவுசெய்தனர்.

ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தெற்காசியாவில் பதக்கம் வென்ற இந்துனில் ஹேரத் கடைசி 100 மீற்றரில் போட்டியை கைவிட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக ருசிரு சதுரங்க தங்கம் வென்றார். இவர் போட்டித் தூரத்தை 1:49:82 நிமிடங்களில் நிறைவுசெய்ய, A.D. குமார இரண்டாவது இடத்தையும், D.மதுரங்க மூன்றாவது இடத்தையும் பிடித்துக்கொண்டனர்.

100 மீற்றர் சட்டவேலி ஓட்டம்

பெண்களுக்கான சட்டவேலி ஓட்டத்தில் கடைசி நொடியில் வேகத்தை அதிகரித்த இரேசனி ராஜசிங்க தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொண்டதுடன், தெற்காசியாவில் தங்கம் வென்ற, லக்சிக சுகந்தி இரண்டாவது இடத்தை பிடித்தார். இரேசனி போட்டித்தூரத்தை 13:85 செக்கன்களில் நிறைவுசெய்ய சுகந்தி 13:89 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்ததார்

கோலூன்றி பாய்தல் (பெண்கள்)

பெண்களுக்கான கோலூன்றி பாய்தலில், யாழ் வீராங்கனை அனித்தா ஜெகதீஸ்வரனின் சாதனையை சச்சினி பெரேரா இன்று முறியடித்தார். இந்த ஆண்டு பதிவாகிய, முதல் தேசிய சாதனையாக இது அமைந்தது

ஏற்கனவே, அனித்தா பதிவு செய்த 3.55 மீற்றர் என்ற சாதனையை முறியடித்த சச்சினி 3.56 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை KAKC. கொடித்துவக்கு இரண்டாம் (3.10 மீற்றர்) இடத்தையும், S.D ரனசிங்க மூன்றாம் (3.00 மீற்றர்) இடத்தையும் பெற்றுக்கொண்டனர். 

110 மீற்றர் சட்டவேலி ஓட்டம் (ஆண்கள்)

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் ரொசான் தம்மிக தங்கப்பதக்கத்தை வெற்றிக்கொண்டார். இவர் போட்டித்தூரத்தை 14.33 செக்கன்களில் நிறைவு செய்தார்.  

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<