கொழும்பின் முன்னணி பெளத்த பாடசாலைகளான ஆனந்த கல்லூரிக்கும், நாலந்த கல்லூரிக்கும் இடையில் ஆண்டுதோறும் இடம்பெற்றுவரும் வருடாந்த கிரிக்கெட் பெரும் போட்டியான (BIG MATCH) “89 ஆவது பழுப்பு வர்ணங்களின் சமர் (Battle of Maroons) “ இம்முறையும் சமநிலையான முடிவை எட்டியிருக்கின்றது.
கடந்த 14 ஆண்டுகளாக சமநிலை முடிவுகளையே பெற்றிருக்கும் பழுப்பு வர்ணங்களின் சமரில் இம்முறையாவது வெற்றி முடிவு ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இரண்டு கல்லூரிகளும் நேற்று (2) கொழும்பு SSC மைதானத்தில் களமிறங்கின.
வடக்கின் பெரும் சமரில் இம்முறை சாதிக்கப்போவது யார்?
வடக்கின் இரு புகழ்பூத்த பாடசாலைகளான சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரி. சென். ஜோன்ஸ் கல்லூரி
இரண்டு நாட்கள் கொண்ட போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நாலந்த கல்லூரியின் தலைவர் லக்ஷித ரசஞ்சன முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஆனந்த கல்லூரிக்கு வழங்கியிருந்தார்.
இதன்படி ஆனந்த கல்லூரி வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்து முதல் இன்னிங்சுக்காக 55 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 141 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றுக் கொண்டனர்.
ஆனந்த கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக லஹிரு ஹிரன்ய அரைச்சதம் கடந்து 58 ஓட்டங்களினை பெற்றிருக்க, நாலந்த கல்லூரியின் பந்துவீச்சில் சுஹங்க விஜயவர்தன 52 ஓட்டங்களினை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
தொடர்ந்து பதிலுக்கு தம்முடைய முதல் இன்னிங்சில் துடுப்பாடிய நாலந்த வீரர்கள், போட்டியின் முதல் நாள் நிறைவின் போது 36 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தனர். அணித்தலைவரான லக்ஷித ரசஞ்சன 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருந்தார்.
இன்றைய நாளில் தொடர்ந்த போட்டியில் லக்ஷித ரஞ்சன அரைச்சதம் கடந்ததோடு (60), ரவீன் டி சில்வாவும் 35 ஓட்டங்களினைப் பெற்று உதவ 64.3 ஓவர்களில் நாலந்த கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களினை குவித்துக் கொண்டது.
ஆனந்த கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக அவ்வணியின் தலைவர் அசெல் சிகெர மற்றும் ஹிஷான் விஸ்வஜித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து ஆனந்த கல்லூரி 59 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்தது. முதல் இன்னிங்ஸ் போன்று இம்முறை நாலந்த கல்லூரி வீரர்கள் தவறுகள் செய்திராத காரணத்தினால் மிருதுவான முறையில் ஓட்டங்கள் சேர்க்கப்பட்டன. இதில், கமேஷ் நிர்மால் நாலந்த கல்லூரிக்கு இம்முறை சதம் ஒன்றினை விளாசியிருந்ததுடன், அசெல் சிகெர 46 ஓட்டங்களுடன் பெறுமதி சேர்த்திருந்தார்.
இலங்கை உள்ளூர் T-20 தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான T-20 தொடரின்
இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு ஆனந்த கல்லூரியானது இரண்டாம் இன்னிங்சுக்காக 60 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்த போது ஆட்டத்தின் நேரம் முடிவடைந்த காரணத்தினால் போட்டி சமநிலை அடைந்தது.
ஆனந்த கல்லூரியின் துடுப்பாட்டத்தில் கமேஷ் நிர்மால் 100 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காது நின்றிருக்க, மறுமுனையில் நாலந்த கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக உமேஷ்க தில்ஷான் 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.
இந்த ஆண்டு சமரும் சமநிலை அடைந்ததன் காரணமாக தொடரின் வெற்றிக்கிண்ணமான Dr. N.M. பெரேரா நினைவுக் கேடயத்தினை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சி நாலந்த கல்லூரிக்கு இம்முறை 65 ஆவது வருடமாகவும் வீணாகியிருக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 141 (55) லஹிரு ஹிரன்ய 58, தமிந்த தேஷன் 24, சுஹங்க விஜேயவர்தன 6/52, சமிந்து விஜேசிங்க 4/33
நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 213 (64.3) லக்ஷித ரசஞ்சன 60, ரவீன் டி சில்வா 35, அஷெல் சிகெர 3/37, ஹிஷான் விஸ்வஜித் 3/38
ஆனந்த கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 252/7 (60) கமேஷ் நிர்மால் 100*, அசெல் சிகெர 46, லஹிரு அத்தநாயக்க 33, உமேஷ்க தில்ஷான் 3/38
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.