ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் ஜனித்துக்கு வெள்ளிப் பதக்கம்

6th Asian youth Athletic Championship 2025

54
Janith Lakshan

சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் நேற்று (15) ஆரம்பமான 6ஆவது 18 வயதின்கீழ் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி வீரர் ஜனித் லக்ஷான் ஜென்கின்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

இம்முறை ஆகிய கனிஷ்ட மெய்வலலுனர் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது பதக்கம் இதுவாகும்.

பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பங்குகொண்ட அவர், 13.01 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அத்துடன், இது அவரது தனிப்பட்ட அதிசிறந்த தூரப் பெறுதியாகும்.

12 வீரர்கள் பங்குபற்றிய முப்பாய்ச்சல் போட்டியில் தனது 6ஆவதும் கடைசியுமான முயற்சியில் 15.10 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து ஜென்கின்ஸ் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அவர் தனது 6 முயற்சிகளிலும் முறையே 14.54 மீ., 14.79 மீ., 14.96 மீ., 14.89 மீ., 14.77 மீ., 15.10 மீ. தூரங்களைப் பதிவுசெய்தார். இதில் கடைசி முயற்சியில் அவர் பதிவுசெய்த 15.10 மீற்றர் தூரமானது அவரது தனிப்பட்ட அதிசிறந்த தூரப் பெறுதியாகும்.

இப் போட்டியில்; 15.53 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த சீன வீரர் டொஹ் ஸியுவான் தங்கப் பதக்கத்தையும், மற்றொரு சீன வீரரான மா போயு (14.97 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

இதனிடையே, இந்தப் போட்டியில் பங்குபற்றிய மற்றொரு இலங்கை வீரரான சசிந்து ஹன்சன ஜயசிங்க (14.55 மீற்றர்) 7ஆம் இடததைப் பெற்றார்.

இதனிடையே, இம்முறை ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதல் நாளன்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் தகுதிகான் சுற்றின் இரண்டாவது போட்டியில் பகுகொண்ட இலங்கை வீராங்கனை தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ (11.91 செக்.) முதலிடத்தைப் பிடித்து நேரடியாக இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.

அதேபோல, மூன்று தகுதிகாண் போட்டிகள் நிறைவில் ஒட்டுமொத்த நிலையில் தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ மூன்றாம் இடத்தில் இருப்பதால் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு பதக்கமொன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஆண்களுக்கான 400 மீற்றர் இரண்டாவது அரை இறுதி ஓட்டப் போட்டியை 49.50 செக்கன்களில் நிறைவு செய்து 4ஆவது இடத்தைப் பெற்ற இரேஷ் மதுவன்த போகொட இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதி செய்தார்.

மேலும், அவருடன் போட்டியிட்ட சக வீரர் ஷானுக்க நெத்மல் கொஸ்தா முதலாவது அரை இறுதிப் போட்டியை 49.70 செக்கன்களில் நிறைவு செய்து 5ஆம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டி வாய்ப்பை தவறவிட்டார்.

இந்த நிலையில், பெண்களுக்கான 1500 மீற்றர் இறுதிப் போட்டியில் பகுகொள்ளவிருந்த இலங்கை வீராங்கனைகளான நிதுக்கி ப்ரார்த்தனா, அயேஷா செவ்வந்தி ஆகிய இருவரும் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<