இம் மாதம் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில், பேராதனை பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவிருக்கும் “கண்டி ஹொக்கி சிக்ஸர்ஸ்” போட்டிகளில், மொத்தமாக 57 அணிகள் 6 கிண்ணங்களுக்காக போட்டியிடவுள்ளன.
கண்டி ஹொக்கி சிக்ஸர்ஸ் போட்டிகளை, கண்டி மாவட்ட ஹொக்கி சம்மேளனம் மற்றும் தசாப்த காலமாக பெண்கள் ஹொக்கி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீதாதேவி ஹொக்கி சம்மேளனம் ஆகியவை இணைந்து ஒழுங்கு செய்துள்ளது.
போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான அணிகள் பங்குபற்றுவதினால், சிரேஷ்ட ஆண்கள் பிரிவானது, சூப்பர் 10 மற்றும் டொப் 20 என இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பிரிவில் முப்படைகள் மற்றும் ஏனைய கழகங்கள் உள்ளடங்கலாக 9 அணிகள் பங்குபற்றுகின்றன.
மேலும் 15 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கண்டியை சார்ந்த பாடசாலை அணிகள் பங்குபற்றவுள்ளன.
இவ் வருடத்தின் சிறப்பம்சமாக மூத்த வீரர்களுக்கான பிரிவில், இந்தியாவில் இருந்து ஹொக்கி அணியொன்று வருகை தந்து விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெங்களூரை சார்ந்த ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகமானது இப்போட்டியில் விளையாடவுள்ளது, இப்போட்டிக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஆண்களுக்கான சூப்பர் 10 போட்டிகள் சுவாரஸ்யமாக அமைய உள்ளது. இராணுவ அணி, விமானப்படை அணி மற்றும் கடற்படை அணிகளுடன் CH & FC அணி மற்றும் SLEME அணிகள் இப்பிரிவில் மோதவுள்ளதால் விறுவிறுப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
உலக பிரசித்தி பெற்ற வீரர்கள் போட்டியில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இந்திய ஹொக்கி அணியின் முன்னாள் வீரரும், 1980ஆம் ஆண்டு மொஸ்கோ நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார். மேலும் இந்திய ஹொக்கி அணியின் முன்னாள் தலைவரும் பயிற்றுவிப்பாளருமான ஜுட் செபஸ்டியன் அவர்களும் கலந்து சிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பங்குபற்றும் அணிகள்
சூப்பர் 10 அணிகள்
- இலங்கை கடற்படை – 2 அணிகள்
- இலங்கை விமானப்படை – 2 அணிகள்
- வென்னப்புவ விளையாட்டு கழகம் – 1 அணி
- SLEME SC – 1 அணி
- இலங்கை இராணுவப்படை விளையாட்டு கழகம் – 2 அணி
ஆண்கள் சூப்பர் 20 அணிகள்
- ரோயல் விளையாட்டு கழகம்
- வென்னப்புவ விளையாட்டு கழகம்
- பழைய சில்வெஸ்டர்ஸ் விளையாட்டு கழகம்
- பழைய வித்யார்த்த விளையாட்டு கழகம்
- பழைய ராஜன்ஸ் விளையாட்டு கழகம்
- பேராதெனிய பல்கலைக்கழகம்
- கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் – 2 அணிகள்
- கன்னர்ஸ் விளையாட்டு கழகம் – 2 அணிகள்
- ஹிந்து விளையாட்டு கழகம்
- SLEME விளையாட்டு கழகம்
- சின்ஹ விளையாட்டு கழகம்
- சாஹிரா விளையாட்டு கழகம்
- கடற்படை நீலம்
- சபரகமுவ பல்கலைக்கழகம்
- ஓர்டன்ஸ் விளையாட்டு கழகம்
- மாரிஸ் ஸ்டெல்லா விளையாட்டு கழகம்
- சிக்னல்ஸ் விளையாட்டு கழகம்
மகளிர் அணி
- இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்
- சீதாதேவி விளையாட்டு கழகம்
- இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் – 2 அணிகள்
- தேவியன்ஸ் விளையாட்டு கழகம்
- கண்டி மகளிர்
- ஜனாதிபதி விளையாட்டு கழகம்
- சபரகமுவ பல்கலைக்கழகம்
கண்டி பாடசாலைகள் – 15 வயதுக்கு உட்பட்ட மகளிர்
- சீதாதேவி – 3 அணிகள்
- புனித அந்தோனியார் மகளிர் மஹா வித்தியாலயம்
- மஹாமாயா மகளிர் மஹா வித்தியாலயம்
- புஷ்பானந்த மகளிர் மஹா வித்தியாலயம்
- ஸ்வர்ணமாலி மகளிர் மஹா வித்தியாலயம்
- நுகாவெல செண்ட்ரல்
கண்டி பாடசாலைகள் – 15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள்
- கிங்ஸ்வுட் கல்லூரி
- தர்மராஜ கல்லூரி
- புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி
- திரித்துவ கல்லூரி
- புனித அந்தோனியார் கல்லூரி
- வித்யார்த்த கல்லூரி
மூத்த அணிகள்
- SL Masters (Gold & Maroons)
- CH & FC விளையாட்டு கழகம்
- வென்னப்புவ விளையாட்டு கழகம்
- கண்டி விளையாட்டு கழகம்
- யங்ஸ்டர்ஸ் விளையாட்டு கழகம்
- மலாய விளையாட்டு கழகம்
- ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் – பெங்களூரு, இந்தியா