சரித் அசலங்கவின் சதத்தின் உதவியோடு தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு எதிரான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
பிரியாவிடை போட்டிக்காக காத்திருக்கும் லசித் மாலிங்க
தனது வெளிப்படையான….
ஹம்பாந்தோட்டை, மஹிந்த ரஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் இரண்டாவது நாளான இன்று (03) தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி ஆரம்ப விக்கெட்டுகளை குறைந்த ஓட்டங்களுக்கு பறிகொடுத்தபோதும் 6ஆவது விக்கெட்டுக்கு சரித் அசலங்க மற்றும் ஷம்மு அஷான் இருவரும் இணைந்து பெற்ற சத இணைப்பாட்டம் அணியை முன்னிலை பெறச் செய்தது.
முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு முன்னாள் ஓட்டங்கள் பெற தடுமாறிய தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி 216 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்போது 19 வயதுடைய சுழற்பந்து வீச்சாளர் கமிந்து மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே இலங்கை வளர்ந்து வரும் அணி இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. 4 ஓட்டங்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த பதும் நிசங்க மேலும் இரண்டு ஓட்டங்களை பெற்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தென்னாபிரிக்காவை மட்டுப்படுத்திய இலங்கை வளர்ந்துவரும் அணி
தென்னாபிரிக்க…
தொடர்ந்து பினுர பெர்னாண்டோவும் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 117 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இக்கட்டான நிலையை சந்தித்தது.
இந்நிலையில் 6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அசலங்க மற்றும் ஷம்மு அஷான் ஜோடி நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர். இருவரும் இணைந்து 101 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற இலங்கை அணியின் ஓட்டங்கள் 218 ஆக உயர்ந்தது.
சிறப்பாக ஆடிய அசலங்க 301 பந்துகளுக்கு முகம்கொடுத்து 9 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் சரியாக 100 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
அதேபோன்று, ஷம்மு அஷான் 117 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 61 ஓட்டங்களை பெற்றார். இதன்போது பந்துவீச்சில் சோபித்த 19 வயது வீரர் கமிந்து மெண்டிஸ் பின்வரிசையில் வந்து பெற்ற 31 ஓட்டங்களும் இலங்கை வளர்ந்து வரும் அணி 300 ஓட்டங்களை தாண்டுவதற்கு உதவியது.
SLC டி-20 லீக் இம்மாத இறுதியில் ஆரம்பம்
SLC டி-20 லீக் தொடரை நடத்தும் திட்டத்தை இலங்கை கிரிக்கெட் …
கமிந்து மெண்டிஸ் 8 ஆவது விக்கெட்டுக்கு அசலங்கவுடன் ஜோடி சேர்ந்து 85 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி இலங்கை வளர்ந்து வரும் அணி 64.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 319 ஓட்டங்களை பெற்றது. இதன்மூலம் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியை விடவும் இலங்கையால் முதல் இன்னிங்ஸில் 103 ஓட்டங்களால் முன்னிலை பெற முடிந்தது.
தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஆரம்ப வேகப்பந்து ஜோடியான லிதோ சிபம்லா மற்றும் நன்ட்ரே பர்கர் இருவரும் முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எனினும் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய நிலையில் இரண்டாவது நாளில் கடைசி நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியினால் ஆட்ட நேரம் முடியும் வரை தமது விக்கெட்டுகளை காத்துக் கொள்ள முடிந்தது.
ஆரம்ப வீரர்களான அணித்தலைவர் டோனி டி சொர்சி 25 ஓட்டங்களுடனும் விக்கெட் காப்பாளர் ரியான் ரிகல்டன் 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். இதன்மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 47 ஓட்டங்களை பெற்றுள்ளது.
தற்பொழுது அந்த அணி 10 விக்கெட்டுகளும் கைவசம் இருக்கும் நிலையில் இலங்கை வளர்ந்து வரும் அணியை விடவும் தொடர்ந்தும் 56 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளது. எனினும், அந்த அணி இலங்கைக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.
நான்கு நாட்கள் கொண்ட போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை (04) தொடரும்.
போட்டியின் சுருக்கம்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க




















