மாரடைப்பினால் மைதானத்திலேயே உயிரிழந்த இளம் வீரர்

248
Image - DNA India

மும்பையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றின் போது 24 வயதுடைய இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் மாரடைப்பு காரணமாக மைதானத்திலலேயே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் அதிர்ச்சிக்குள் ஏற்படுத்தியிருக்கின்ற சம்பவம் ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் நடைபெற்றுள்ளது.

ஆஸி. அணியின் தலைவராக 7 வயதுடைய லெக் ஸ்பினர்

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான….

இந்தியாவின் மும்பை நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள பண்டப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரொன்று நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மும்பை பிரதேசத்தில் உள்ள பல உள்ளூர் அணிகள் போட்டி போட்டு வருகின்றன.

மும்பையை பிறப்பிடமாக கொண்ட வைபவ் கேஸ்கர் எனப்படும் 24 வயதுடைய இளம் கிரிக்கெட் வீரரொருவர் கையில் துடுப்பு மட்டையுடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது மைதானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

மும்பையில் அதிக வெப்பம் காணப்படுவதானால் குறித்த வீரர் மயங்கி விழுந்துள்ளார் என்று உணர்ந்து சக வீரர்கள் வைத்தியசாலைக்கு இவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

வைத்தியசாலை சென்றதும் குறித்த வீரர் மயங்கி விழுந்த வேளையிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், மாரடைப்பு காரணமாகவே குறித்த வீரர் உயிரிழந்ததாக பரிசோதனை செய்த வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மும்பை பிரதேச வட்டாரத்தில் மிகவும் பண்பாகவும், விளையாட்டில் பிரயல்யமாகவும் திகழ்ந்து கொண்டிருந்த இந்த இளம் கிரிக்கெட் வீரரின் மறைவு முழு கிரிக்கெட் உலகையும் வியப்பிற்குள் ஆழ்த்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் அமைந்துள்ள சோமியா வித்யவிஹார் கல்லூரியில் விளையாட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர் ஒருவரும் இவ்வாறு மாரடைப்பால் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற பல மரண சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும், இந்த செய்தியை கேட்டவுடன் தலையில் பந்து தாக்கி மைதானத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்த ஆஸி. வீரர் பிலிப் ஹியூஸின் மரணம் நினைவுக்கு வருகின்றது. இது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்ற முதல் இயற்கை மரணமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<