ஆஸி. அணியின் தலைவராக 7 வயதுடைய லெக் ஸ்பினர்

3388
cricket.com.au

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியின் குழாமில் லெக் ஸ்பின் பந்து வீசக்கூடிய இருதய நோயினால் பாதிக்கப்பட்ட 7 வயதுடைய சிறுவன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் எதிர்வரும் புதன்கிழமை (26) மெல்பேர்னில் ஆரம்பமாகவுள்ள 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணியில் 14 ஆவது வீரராக 7 வயதை உடைய ஆர்ச்சி சில்லர் எனும் சிறுவன் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். ஏலத்தில் கோடிகளை அள்ளிய வருண் சக்ரவர்த்தி

சர்வதேச கிரிக்கெட்டில் இரசிகர்கள் மத்தியில் …

இந்த செய்தியை அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லேஞ்சர் குறித்த சிறுவனுக்கு தொலைபேசி மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டமை மாத்திரமல்லாமல் அவுஸ்திரேலிய அணியின் உப தலைவர் பதவியும் இந்த சிறுவனுக்கு வழங்கப்பட்டமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாக்சிங் டே (Boxing day) டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ள குறித்த டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த இருதய நோயினால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவனின் பெயர் தற்போது உலகலாவிய ரீதியில் பேசப்பட்டு வருகின்றது.

யார் இந்த சிறுவன்..? எதற்காக அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்..?

ஆர்ச்சி சில்லர்  எனப்படும் 7 வயதுடைய சிறுவன் கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் ஈடுபாடு உடைய ஒரு சிறுவன். இந்த ஈடுபாட்டின் மூலமாக தான் தேசிய அணியில் விளையாட வேண்டும் என்பது இந்த சிறுவனின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கின்றது.

தான் ஒரு சுழl பந்துவீச்சாளராக விளையாட வேண்டும் என்பது இவனின் எண்ணமாகும். அதுவும் லெக் ஸ்பினராக விளையாட வேண்டும் என்பதாகும். இந்த சிறுவனின் எண்ணப்படி ஒரு லெக் ஸ்பினராகவே அணியின் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அடிலெயிட் நகரத்தை சேர்ந்த ஆர்ச்சி சில்லர் எனப்படும் இந்த சிறுவன் பிறந்து 3 ஆவது மாதத்தில் அவனது இதயத்தின் செயற்பாடுகளில் குறைபாடு ஒன்று இருப்பதை வைத்தியர்கள் கண்டுபிடித்தனர். இதற்காக அப்போது அறுவை சிகிச்சை செய்தார்கள். பின்னர் மீண்டும் தனது 9 ஆவது மாதத்தில் அடுத்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. குறித்த இரண்டாவது அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்காக வைத்தியர்கள் 7 மணித்தியாலங்களை செலவிட்டதாக இந்த சிறுவனின் தாயார் குறிப்பிட்டார்.

தற்போது மீண்டும் 3 ஆவது முறையாக டிசம்பர் மாத முற்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் போது தான் வைத்தியர்கள் அதிர்ச்சி செய்தியொன்றை வெளியிட்டனர். குறித்த சிறுவனின் ஆயட்காலம் எப்போது என்றாலும் முடிவுக்கு வராலாம் என்கின்ற செய்தியாகும்.

குறித்த சிறுவனின் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பமாகும். கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் விருப்பம் கொண்ட சிறுவன் தான் எதிர்காலத்தில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக வர வேண்டும் என நினைத்தவன்.

எனவே இந்த சிறுவன் இந்த உலகை விட்டு எப்போது பிரிந்து செல்லப்போகின்றான் என்பது தெரியாமல் இருந்த சிறுவனுக்கு அவனது ஆசையை நிறைவேற்றும் நோக்குடன் நேற்று (22) சனிக்கிழமை தனது 7 ஆவது பிறந்த நாளை கொண்டாயிருந்த வேளையிலேயே 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இணைத்த செய்தியை சிறுவனிடம் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன் கூறி அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

அது மாத்திரமல்லாமல் அவனது எதிர்கால தலைவர் பதவியின் ஆசைக்கு அவுஸ்திரேலிய அணியில் இணைத்து உப தலைவர் பதவியை வழங்கியுள்ளது அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம். இந்த விடயங்கள் அனைத்தும்மேக் விஷ் அவுஸ்திரேலியாஎனும் திட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் பின்னர் குறித்த சிறுனிடம் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டவுடன் உன்னால் என்ன காரியம் செய்ய முடியும் என கேட்டதற்குநான் விராட் கோஹ்லியை ஆட்டமிக்க செய்வேன்” என புன்னகையுடன் தெரிவித்தான்.

மேலும், இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் அவுஸ்திரேலிய அணி போட்டிக்கான பயிற்சிகளில் ஈடுபடும் போது குறித்த சிறுவனும் அதில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு சாதாரண சிறுவனின் சந்தோசத்திற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி செய்திருக்கும் இந்த சாதனையை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.

அணியில் எவ்வித மாற்றங்களும் இல்லை என தெரிவித்த அவுஸ்திரேலிய அணியின் குழாமில் தற்போது சிறிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாம்

டிம் பெய்ன் (அணித்தலைவர்), ஜொஸ் ஹெசில்வூட், மிட்சல் மார்ஷ், பெட் கம்மின்ஸ், எரோன் பின்ச், பீட்டர் ஹேன்ஸ்கொம்ப், மார்கஸ் ஹாரிஸ், ட்ரெவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, நைதன் லெயன், சோன் மார்ஷ், பீட்டர் சிடில், மிட்சல் ஸ்டாக், ஆர்ச்சி சில்லர் (7வயது சிறுவன்)

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க