லங்கா T10 சுபர் லீக்கில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர்கள்

Lanka T10 Super League 2024

61
லங்கா T10 சுபர் லீக்கில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் சபையினால் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள லங்கா T10 சுபர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் வரைவு (Players Draft) நேற்று (10) கொழும்பில் நடைபெற்றது. 

ஆதன்படி, அங்குரார்ப்பண லங்கா T10 சுபர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக 64 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் டைமல் மில்ஸ், மொஹமட் ஆமீர், டேவிட் வீஸா, லுக் வூட், மொஹமட் ஷாசாத் உள்ளிட்ட பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதேபோல, இந்த தொடரில் விளையாடுகின்ற ஒரேயொரு தமிழ் பேசும் வீரராக யாழ் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த்தை ஹம்பந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணி வாங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள அங்குரார்ப்பண லங்கா T10 சுபர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜப்னா டட்டன்ஸ், கண்டி போல்ட்ஸ், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ், கொழும்பு ஜகுவார்ஸ், நுவரெலியா கிங்ஸ் மற்றும் கோல் மார்வல்ஸ் ஆகிய 6 அணிகள் களமிறங்கவுள்ளது.

எவ்வாறாயினும், முன்னர் அறிவித்தபடி கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் நீஙம்பு பிரேவ்ஸ் ஆகிய 2 அணிகளும் இம்முறை லங்கா T10 சுபர் லீக்கில் இணையாது எனவும், அதற்குப் பதிலாக கொழும்பு ஜகுவார்ஸ் மற்றும் நுவரெலியா கிங்ஸ் ஆகிய அணிகள் களமிறங்கும் என வீரர்கள் வரைவிற்கு முன் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற வீரர்கள் வரைவின் போது ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 வீரர்களையாவது தமது அணிக்கு தெரிவு செய்யும் வாய்ப்பினைப் பெற்றிருந்தது.

இதன்படி, வீரர்கள் வரைவிற்கு முன் ஒவ்வொரு உரிமையாளரும் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் நேரடியாக 3 உள்ளூர் மற்றும் 3 வெளிநாட்டு என ஆறு வீரர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும். இதில் ஒரு பெறுமதிவாய்ந்த (Icon) வீரர், சகலதுறைகளிலும் பிரகாசிக்கக்கூடிய (Platinum) வீரர், A பிரிவைச் சேர்ந்த இலங்கை வீரர் ஒருவர் மற்றும் வெளிநாட்டு வீரர் ஒருவர், B பிரிவைச் சேர்ந்த இலங்கை வீரர் ஒருவர் மற்றும் வெளிநாட்டு வீரர் ஒருவர் ஆகியோரை உரிமையளார்கள் நேரடியாக ஒப்பந்தம் செய்யலாம். மற்றைய வீரர்களைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் நேற்று இடம்பெற்ற வீரர்கள் வரைவின் மூலம் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இதன்படி, A பிரிவிலிருந்து இலங்கை அணியின் முன்னணி நட்சத்திரங்களான சரித் அசலங்க, பெதும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், துஷ்மன்த சமீர, துஷான் ஹேமன்த மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகிய வீரர்கள் 35 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டனர்.

அதேபோல, அதே பிரிவில் வெளிநாட்டு வீரர்களாக பாகிஸ்தானின் மொஹமட் ஆமிர், சைம் அய்யூப், இங்கிலாந்தின் றிச்சர்ட் க்ளெசன், லுக் வூட், பென்னி ஹவெல் மற்றும் டைமல் மில்ஸ் ஆகிய 6 வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இதனிடையே, B பிரிவின் கீழ் துனித் வெல்லாலகே, சதுரங்க டி சில்வா, தரிந்து ரத்நாயக்க, லஹிரு மதுசங்க, அஞ்சலோ பெரேரா மற்றும் ஜெப்ரி வெண்;டர்சே ஆகியோர் இலங்கை வீரர்களாக 20 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டனர்.

இதேவேளை, லங்கா T10 சுபர் லீக் தொடருக்கு முன்னர் 3 உள்ளூர் வீரர்களையும், 3 வெளிநாட்டு வீரர்களையும் நேரடியாக ஒப்பந்தம் செய்ய அனைத்து அணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்படி, கோல் மார்வல்ஸ் அணி, இளம் வீரர் சமிந்து விக்ரமசிங்க, பானுக ராஜபக்ஷ, மஹீஷ் தீக்ஷன ஆகிய மூவரையும், ஜப்னா டைட்டன்ஸ் அணி வனிந்து ஹஸரங்க, குசல் மெண்டிஸ், நுவன் துஷார ஆகிய மூவரையும், கண்டி போல்ட்ஸ் அணி திசர பெரேரா, தினேஷ் சந்திமால், மிலிந்த சிறிவர்தன ஆகிய மூவரையும், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணி தசுன் ஷானக, இசுரு உதான, குசல் ஜனித் பெரேரா ஆகிய மூவரையும், கொழும்பு ஜகுவார்ஸ் அணி அஞ்சலோ மெத்யூஸ், மதீஷ பத்திரன மற்றும் அகில தனஞ்சய ஆகிய மூவரையும், நுவரெலியா கிங்ஸ் அணி அவிஷ்க பெர்னாண்டோ, கசுன் ராஜித, தனுஷ்க குணதிலக்க ஆகிய மூவரையும் உள்ளூர் வீரர்களாக நேரடியாக ஒப்பந்தம் செய்தன.

லங்கா T10 சுபர் லீக்கில் களமிறங்கும் அணிகளும், வீரர்கள் பற்றிய விபரங்களும்

கொழும்பு ஜகுவார்ஸ் அணி அஞ்சலோ மெத்யூஸ், அசாம் கான், மதீஷ பத்திரன, ஆசிப் அலி, அகில தனஞ்சய, நஜிபுல்லா சத்ரான், கமிந்து மெண்டிஸ், டைமல் மில்ஸ், அஞ்சலோ பெரேரா, அலி கான், ரமேஸ் மெண்டிஸ், இஷித விஜேசுந்தர, ஆமிர் ஜமால், ரணுத சோமரட்ன, ஜுவல் அண்ட்ரூ, டில்ஷான் மதுசங்க, அசித்த பெர்னாண்டோ, கருக்க சங்கேத்.

 

கோல் மார்வல்ஸ் அணி – மஹீஷ் தீக்ஷன, சகிப் அல் ஹசன், பானுக ராஜபக்ஷ, அலெக்ஸ் ஹேல்ஸ், சமிந்து விக்கிரமசிங்க, அன்ட்ரே பிளெட்சர், பினுர பெர்னாண்டோ, லுக் வூட், ஜெப்ரி வெண்டர்சே, சஹூர் கான், பிரபாத் ஜயசூரிய, சந்துன் வீரக்கொடி, கெஸ்ரிக் வில்லியம்ஸ், துமிந்து செவ்மின, ததிவன்சே மருமாணி, சதீஷ ராஜபக்ஷ

 

ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணி – தசுன் ஷானக, இப்திகார் அஹமட், குசல் ஜனித் பெரேரா, ஹஸ்ரத்துல்லா ஷசாய், இசுரு உதான, கரீம் ஜன்னத், துஷ்மந்த பெர்னாண்டோ, றிச்சர்ட் க்ளெசன், தரிந்து ரத்நாயக்க, மொஹமட் ஷசாத், நிஷான் பீரிஸ், தனஞ்சய லக்ஷான், ஷெவோன் டேனியல், சௌமிய சர்கார், பிரையன் பென்னட், விஜயகாந்த் வியாஸ்காந்த், சஹான் ஆராச்சிகே, சமத் கோமஸ்.

 

ஜப்னா டைட்டன்ஸ் அணி – வனிந்து ஹஸரங்க, டொம் கொலர் கெட்மோர், குசல் மெண்டிஸ், ஜொன்சன் சார்ள்ஸ், நுவன் துஷார, டுவைன் பிரிட்டோரியஸ், சரித் அசலங்க, மொஹமட் அமீர், துனித் வெல்லாலகே, டேவிட் வீஸா, பிரமோத் மதுஷான், பவன் ரத்நாயக்க, ஜோர்ஜ் கார்டன், ட்ரவீன் மெத்யூஸ், கெவின் விக்கம்.

 

கெண்டி போல்ட்ஸ் அணி – திசர பெரேரா, இமாட் வசீம், தினேஷ் சந்திமால், ஜோர்ஜ் முன்சி, மிலிந்த சிறிவர்தன, அமீர் ஹம்சா, பெதும் நிஸ்ஸங்க, சைம் அய்யூப், சதுரங்க டி சில்வா, ஷாநவாஸ் தஹானி, ஷெஹான் ஜயசூரிய, சாமிக குணசேகர, சந்திரபோல் ஹேம்ராஜ், தனால் ஹேமானன்த, அரினெஸ்டோ வீஸா, சீக்குகே பிரசன்ன

 

நுவரெலியா கிங்ஸ் அணி – அவிஷ்க பெர்னாண்டோ, சௌரப் திவாரி, கசுன் ராஜித, கைல் மேயர்ஸ், தனுஷ்க குணதிலக, ஒஷேன் தோமஸ், குஷான் ஹேமந்த, பென்னி ஹவெல், லஹிரு மதுசங்க, அஃப்தாப் அலாம், நிம்சர அதெரகல்ல, யசோதா லங்கா, சுபருல்லா அக்பரி, விஷேன் ஹெலம்பகே, ரிவால்டோ கிளார்க், சாமிக்க கருணாரத்ன, புலிந்து பெரேரா.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<