இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் அரச தலையீடுகள்: சர்வதேச கிரிக்கெட் பேரவை பரிசீலிக்கவுள்ளது

105

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் அரச தலையீடுகளை பரிசீலிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பணிப்பாளர்கள் சபை இன்று கூடியபோது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்த ஊடக அறிக்கைக்கு அமைவாகஇ இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டமைக்கான காரணங்கள் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளால் சுதந்திரமாகவும்இ நியாயமாகவும் அதிகாரிகளை தேர்வுசெய்வதற்கு இருக்கும் உரிமை தொடர்பாக ஐ.சி.சி யாப்பு மீறப்படுகிறதா என்ற பேச்சுவார்த்தை அடித்தளமாக அமைந்துள்ளது.

இந்த சந்தேகத்திற்கு திருப்தியடையக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதி உதவியை நிலுவையில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் அரச தலையீடுகள் சம்பந்தமாக முறையான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் அது குறித்து இறுதித் தீர்மானமொன்றை எடுக்க முடியவில்லை எனவும் ஐ.சி.சியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையேஇ ஐ.சி.சி யின் பணிப்பாளர்கள் சபை கூட்டத்தில் இலங்கையிலிருந்து எவராலும் பங்குபற்ற முடியாமல் போயுள்ளது.

இன்றைய கூட்டத்தில் பங்குபற்ற இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக்குழு உறுப்பினரான நுஸ்கி மொஹமட் சென்றுள்ள அதேவேளைஇ சட்ட ரீதியாக கூட்டத்தில் பங்குபற்ற முடியாதென ஐ.சி.சியின் பணிப்பாளர்கள் சபை அவரிடம் தெரிவித்துள்ளது.