மிஷாரவின் சிறப்பாட்டத்தால் தோல்வியை தவிர்த்த இலங்கை A அணி

Pakistan A tour of Sri lanka

164

கமில் மிஷாரவின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் பாகிஸ்தான் A அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் போட்டியை இலங்கை A அணி சமநிலையில் முடித்தது.

பல்லேகலவில் நடைபெற்ற போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (31) இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க இலங்கை A அணி 183 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது. எனினும் ஆரம்ப வீரர் லஹிரு உதார 28 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

மழைக்கு மத்தியில் பாகிஸ்தான் A அணி நிதான ஆட்டம்

ஆனால், மறுமுனையில் இருந்த இடது கை துடுப்பாட்ட வீரர் கமில் மிஷார களத்தில் நின்று பிடித்து இலங்கை அணிக்கு இருந்த நெருக்கடியை தவிர்த்தார். வேகமாக ஆடிய மிஷார 97 பந்துகளில் 19 பௌண்ரிகளுடன் 98 ஓட்டங்களை பெற்றார். அவர் ஆட்டமிழந்தபோது கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதன்போது மிஷார இரண்டாவது விக்கெட்டுக்காக ஓஷத பெர்னாண்டோவுடன் இணைந்து 46 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டார் ஓஷத பெர்னாண்டோ 40 பந்துகளில் ஆட்டமிழக்காது 18 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

முன்னதாக நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் A அணி மேலும் கணிசமான ஓட்டங்களை பெற்று இலங்கை A அணிக்கு நெருக்கடி கொடுக்க முயன்றது. 86 ஓட்டங்களுடன் கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்த அணித்தலைவர் சவுத் ஷகீல் சதம் பெற்றார். 118 ஓட்டங்களை பெற்றிருந்த அவர் உபாதை காரணமாக வெளியேறினார்.

WATCH – தோல்விக்கு காரணம் தலைமைத்துவமா? லஹிரு குமாரவா?

மறுமுனையில் 78 ஓட்டங்கைளுடன் கடைசி நாளில் துடுப்பாட்டத்தை தொடர்ந்த ஒமைர் யுசுப் 93 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டார்.

எனினும் பாகிஸ்தான் A அணி முதல் இன்னிங்ஸில் 324 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

ஏற்கனவே இலங்கை A அணி முதல் இன்னிங்ஸில் 141 ஓட்டங்களுக்கு சுருண்ட நிலையில் நான்கு நாட்களிலும் அடிக்கடி பெய்த மழை இலங்கை அணிக்கு கைகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான உத்தயோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் இறுதிப் போட்டி வரும் நவம்பர் 4ஆம் திகதி பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்) – 141 (46) – விஷ்வ பெர்னாண்டோ 30*, லஹிரு உதார 23, லசித் எம்புல்தெனிய 22, கமில் மிஷார 20, நஷீம் ஷா 53/5, குர்ராம் ஷஸாத் 25/3, இர்பானுல்லாஹ் ஷா 40/2

பாகிஸ்தான் A அணி (முதல் இன்னிங்ஸ்) – 324/2d (115) – சவுத் ஷகீல் 118, ஒமைர் யூசுப் 93, கம்ரன் குலாம் 58*, அசித்த பெர்னாண்டோ 56/1, லசித் எம்புல்தெனிய 80/1

இலங்கை A அணி (இரண்டாவதுஇன்னிங்ஸ்) – 144/2 (30.3) –கமில் மிஷார 98, லஹிரு உதார 28

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<