ஜப்பானில் மீண்டும் முதலிடம் பிடித்த கயன்திகா

133
Gayanthika Abeyratne

உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரின் வெண்கலப் பிரிவின் கீழ் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்று வருகின்ற 10ஆவது கினாமி மிச்சிடகா ஞாபகார்த்த மெய்வல்லுனர் தொடரில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை கயன்திகா அபேரத்ன முதலிடம் பிடித்தார்.

3 இறுதிப் போட்டிகளைக் கொண்ட பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கடைசி இறுதிப்போட்டியில் பங்குபற்றிய கயன்திகா, போட்டியை 2 நிமிடங்கள், 04.26 செக்கன்களில் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்றார்.

அத்துடன் 24 வீராங்கனைகள் பங்குபற்றிய 3 இறுதிப் போட்டிகளுக்கான ஒட்டு மொத்த நிலையிலும் அவர் முதலிடம் பிடித்தார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற (29) 38ஆவது ‘ஷிஸுஓக்கா’ சர்வதேச மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்ட கயன்தினா அபேரத்ன, பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள், 04.35 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> ஜப்பானில் மற்றுமொரு மைல்கல்லை எட்டிய அருண தர்ஷன

இதனிடையே, 10ஆவது கினாமி மிச்சிடகா ஞாபகார்த்த மெய்வல்லுனர் தொடரின் முதல் நாளான நேற்று (06) நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அருண தர்ஷன 2ஆவது இடத்தையும், பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நிலானி ரத்நாயக 4ஆவது இடத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<