Sri Lanka U19 vs England U19 – Quarter Finals

பங்களாதேஷில் நடைபெறும் 19 வயதிற்குட்பட்டோருக்கான  உலககிண்ணப்போட்டியின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இன்று (07) மீர்பூர் ஷேர் பங்களா மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் வெற்றி பெற்றமையை அடுத்தே இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ப்ரெட் டெய்லர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

போட்டின் சுருக்கம்

இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்டோர் அணி 184/10 (49.2)
கெலம் டெய்லர் 42
பெண் கிரீன் 26
செம் கரன் 25
வனிது ஹசரங்க 34/3
அசித பெர்னாண்டோ 16/2

இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி 186/4 (35.4)
அவிஷ்க பெர்னாண்டோ 95
சரித் அசலன்க 34
கவின் பண்டார 22

இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி 86 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 6 விக்கட்டுகளால் வெற்றிபெற்று 19 வயதிற்குட்பட்டோருக்கான உலககிண்ணப்போட்டியின் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவானது. இதன்படி இலங்கை அணி எதிர்வரும் 09ம் திகதி இந்தியா அணியை அரையிறுதிப்போட்டியில் சந்திக்கவுள்ளது.