தென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள SA20 லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணியின் இளம் பந்துவீச்சு சகலதுறை வீரர் துனித் வெல்லலாகே பெற்றுக்கொண்டுள்ளார்.
இதன்படி, அவர் SA20 தொடரின் மூன்றாம் கட்டத்தில் பர்ள் றோயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
இந்த நிலையில், பர்ள் றோயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் ஜேக்கப் பெத்தேல் இடம்பிடித்திருந்தார். எனினும், SA20 லீக் தொடர் நடைபெறுகின்ற காலப்பகுதியில் இந்தியாவிற்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடருக்கான இங்கிலாந்து அணிக்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர் SA20 லீக் போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.
>>SA20 லீக்கில் சுப்பர் கிங்ஸ் அணியுடன் இணையும் மதீஷ பதிரண<<
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக்கில் பார்படோஸ் றோயல்ஸ் அணிக்காக துனித் வெல்லாலகே விளையாடியுள்ளார்.
இதன்படி அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள SA20 லீக் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆகும்.
மதீஷ பத்திரன மற்றும் மஹிஷ் தீக்ஷன ஆகியோர் ஜோபர்க் சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள நிலையில், நுவன் துஷார MI கேப்டவுன் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர்.
SA20 லீக் தொடரின் 3ஆவது அத்தியாயம் ஜனவரி 9ஆம் திகதி முதல் பெப்ரவரி 8ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<