கடற்படையினால் மூழ்கடிக்கபட்ட ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

104

பலமான பின் களத்தைக் கொண்டிருந்த கடற்படை விளையாட்டுக் கழகம் அதன் துணையோடு ஹெவலொக் விளையாட்டுக் கழகத்தை வெலிசரையில் நேற்று (18) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் தொடரின் போட்டியில் 25-14 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தியுள்ளதுடன் தமது கடந்த வார தோல்வியில் இருந்தும் மீண்டுள்ளது.

கடற்படை அணியானது இப்போட்டியில் 3 ட்ரைகள், 2 கொன்வெர்சன் உதைகள், ஒரு பெனால்டி மற்றும் ட்ரொப் கோல் ஆகியவற்றின் மூலம் புள்ளிகளைப் பெற தோல்வியடைந்த ஹெவலொக் அணி 2 ட்ரைகள் மற்றும் 2 கொன்வெர்சன் உதைகளின் மூலம் புள்ளிகளை சேர்த்திருந்தது.

ரக்பி விளையாட்டுக்கு சாதமகமான சூழலில் தொடங்கப்பட்டிருந்த போட்டியில் கடற்படை விளையாட்டுக் கழகம் சிறந்த முறையில் ஆரம்பத்தினை காட்டியிருந்த போதிலும், ஹெவலொக் விளையாட்டுக் கழகம் மிகவும் நுணுக்கமாகவும், விரைவாகவும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. இவ்வாறானதொரு நிலையில் தவறு ஒன்றை இழைத்தமைக்காக கடற்படையின் சுப்புன் தில்ஷான் போட்டியின் 4 ஆவது நிமிடத்தில் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

ஹெவலொக் விளையாட்டுக் கழகத்துக்கான முதலாவது ட்ரையினை செனால் தீலக்க கடற்படையின் தடுப்புக்களை ஊடறுத்துப் பெற்றுக் கொண்டார். இந்த ட்ரை ரீசா முபராக் மூலம் சிறப்பாக கொன்வெர்சன் செய்யப்பட்டது. இதனால், 7-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஹெவலொக் கழகம் முன்னிலை அடைந்து கொண்டது. இதனையடுத்து சில நிமிடங்களிலேயே கடற்படை அணியின் முஹ்சீன் பளீல் முதலாவதாக கடற்படைக்கான ட்ரையினை வைத்தார். இந்த ட்ரை திலின வீரசிங்கவினால் கொன்வெர்சன் செய்யப்பட கடற்படை ஹெவலொக் விளையாட்டுக் கழகத்துக்கு பதிலடி தந்தது. (கடற்படை விளையாட்டுக் கழகம் 07- 07 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)

CR & FC அணிக்கு அதிர்ச்சி கொடுத்த CH & FC

டயலொக் ரக்பி லீக் தொடரின் மூன்றாம் வாரத்திற்கான போட்டியொன்றில்…

 தொடர்ந்த நிமிடங்களில் கடற்படை அணி தமது முன்கள வீரர்கள் மூலம்  ஹெவலொக் விளையாட்டுக் கழகத்துக்கு அழுத்தம் தரத் தொடங்கியிருந்தது. கடற்படை அணியின் வேகமான ஆட்டத்தினை சமாளிக்க ஹெவலொக் வீரர்கள் தடுமாறினார். கடற்படை அணி போட்டியின் 18 ஆவது நிமிடத்தில் திலின வீரசிங்கவின் அழகிய பாதவேலையின் மூலம் புள்ளிகளை அதிகரித்து கொண்டது. 25 ஆவது நிமிடத்தில் முன்கள வீரர் லஹிரு விஸ்வஜித் வைத்த ட்ரை ஒன்றினை வீரசிங்க சிறப்பான முறையில் கொன்வெர்சன் செய்ய கடற்படை அணி இன்னும் புள்ளிகளை அதிகரித்துக் கொண்டது. (கடற்படை விளையாட்டுக் கழகம் 17- 07 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)

போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் அடுத்த ட்ரை ஒன்றை சுப்புன் பீரிஸ் மூலம் கடற்படை அணி பெற்றிருந்தது. இதை திலின வீரசிங்க கொன்வெர்சன் செய்யத் தவறியிருந்தார். எனினும் போட்டியில் முன்னிலையை கடற்படை அணியே தொடர்ந்தது. (கடற்படை விளையாட்டுக் கழகம் 22 – 07 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)

தொடர்ந்தும் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கடற்படை அணி ஹெவலொக் வீரர்களுக்கு அச்சுறுத்தல் தரும் விதத்தில் அமைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. திலின வீரசிங்கவுக்கு இந்த தருணத்தில் தமது அணியின் புள்ளிகளை அதிகரிக்க வாய்ப்புக்கள் எட்டியிருந்த போதிலும் அவர் அதனை தவறவிட்டிருந்தார். அத்தோடு போட்டியின் முதல் பாதி முடிவுக்கு வந்தது.

முதல் பாதி: கடற்படை விளையாட்டுக் கழகம் 22 – 07 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)

முதல் பாதியில் அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட காரணத்தினால் இந்தப் பாதியில் அதை எதிரணி அடையாமல் தக்கவைக்க வேண்டிய பொறுப்பு கடற்படைக்கு காணப்பட்டிருந்தது. இதன்படி, ஹெவலொக் விளையாட்டுக் கழகம் ஏற்படுத்திக் கொண்ட ஒவ்வொரு வாய்ப்பினையும் கடற்படை அணியின் வீரர்கள் சமாளித்திருந்தனர். இந்திலையில் தவறு ஒன்றுக்காக கடற்படை அணியின் தலைவர் தனுஷ்க பெரேரா 55 ஆவது நிமிடத்தில் நடுவரால் குற்றம் பிடிக்கப்பட்டிருந்தார். போட்டியின் 50 ஆவது நிமிடத்தில் முன்னர் பெனால்டி உதையொன்றை தவறவிட்ட திலின வீரசிங்க கம்பத்துக்கு மேலாக ட்ரொப் கோலொன்றினைப் உதைந்து கடற்படை தரப்பினை மேலும் முன்னிலைப்படுத்தினார். (கடற்படை விளையாட்டுக் கழகம் 25 – 07 ஹெவ்லோக் விளையாட்டுக் கழகம்)

இலங்கை கனிஷ்ட ரக்பி அணியின் தலைவராக நவீன் ஹேனகன்கனம்கே

19 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக….

 போட்டியின் இறுதி முயற்சியாக  80 ஆவது நிமிடத்தில் கெவின் டிக்சன் வைத்த ட்ரையொன்றை ரீசா முபராக் கொன்வெர்சன் செய்ய ஆறுதல் புள்ளிகளுடன் ஹெவலொக் விளையாட்டுக் கழகம் போட்டியை முடித்துக் கொண்டது.

முழு நேரம்: கடற்படை விளையாட்டுக் கழகம் 25 – 14 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் சுப்புன் பீரிஸ் (கடற்படை விளையாட்டுக் கழகம்)

போட்டி மத்தியஸ்தர் – இர்ஷாத் காதர்

 புள்ளிகள் பெற்றோர்

 கடற்படை விளையாட்டுக் கழகம்

ட்ரைமுஹ்சீன் பளீல் (1), லஹிரு விஷ்வஜித் (1), சுப்புன் பீரிஸ் (1)

கொன்வெர்சன் திலின வீரசிங்க (2)

பெனால்டிதிலின வீரசிங்க (1)

ட்ரொப் கோல்திலின வீரசிங்க (1)

ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

ட்ரைசெனால் தீலக்க (1), கெவின் டிக்சன் (1)

கொன்வெர்சன் ரீசா முபராக் (2)

 அட்டைகள்

கடற்படை விளையாட்டுக் கழகம் சுப்புன் தில்ஷான், தனுஷ்க பெரேரா, துலன்ஜன விஜேசிங்க

ஹெவலொக் விளையாட்டுக் கழகம் சரோ பெர்னாந்து