இந்திய A அணிக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் A குழாம் அறிவிப்பு

102
Image Courtesy - Windies Cricket

இந்திய A அணியுடனான தொடரில் விளையாடுவதற்கான மேற்கிந்திய தீவுகள் A அணியின் ஒருநாள், டெஸ்ட் குழாம்கள் மற்றும் இருதரப்பு தொடருக்கான போட்டி அட்டவணையும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய A அணியானது அடுத்த மாதம் முதல் வாரத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உத்தியோகபூர்வற்ற 50 ஓவர்கள் கொண்ட ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட மூன்று டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் A அணியுடன் மோதவுள்ளது.

கடைசி ஒருநாள் போட்டியை வென்று தொடரை சமன் செய்த இலங்கை A அணி

வெளியிடப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் இரு தொடருக்கான குழாம்களிலும் வித்தியாசமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒருநாள் தொடருக்கான அணியின் தலைவராக மேற்கிந்திய தீவுகள் அணிக்கான 16 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரொஸ்டன் சேஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

15 பேர் கொண்ட ஒருநாள் குழாமில் ரொஸ்டன் சேஸ், சுனில் அம்பிரிஸ், ஜோன் கெம்பல், ஜொனதன் கார்டர், ஷேன் டௌரிச், கிமோ போல், ரொவ்மன் பவெல், ரைமொன் ரைபர், டிவோன் தோமஸ் ஆகிய ஒன்பது வீரர்கள் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்ற வீரர்களாகவும், மேலும் இரண்டு வீரர்கள் டி20 சர்வதேச அறிமுகம் பெற்ற வீரர்களாகவும் காணப்படுகின்றனர்.

இந்திய A அணியானது அண்மையில் சொந்த மண்ணில் இலங்கை A அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தது. குறித்த தொடரில் ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்ட 2-2 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடர் சமநிலையில் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடருக்கான குழாம்

ரொஸ்டன் சேஸ் (அணித்தலைவர்), சுனில் அம்பிரிஸ், ஜோன் கெம்பல், ஜொனதன் கார்டர், ரஹ்கீம் க்ரொன்வெல், ஷேன் டௌரிச், அகீம் ஜோர்டான், கேஜொரன் ஒட்லீ, கிமோ போல், கறி பைரீ, ரொவ்மன் பவெல், ரைமொன் ரைபர், ஷிர்பைன் ருதர்போர்ட், ரொமாரியோ சிப்ஹெர்ட், டிவோன் தோமஸ்    

ஒருநாள் போட்டி அட்டவணை (அனைத்து போட்டிகளும் மேற்கிந்திய தீவுகள் நேரப்படி காலை 9.30 மணிக்கு என்டிகுவாவில் நடைபெறவுள்ளது)

  • 11 ஜூலை – முதலாவது ஒருநாள் போட்டி
  • 14 ஜூலை – இரண்டாவது ஒருநாள் போட்டி
  • 16 ஜூலை – மூன்றாவது ஒருநாள் போட்டி
  • 19 ஜூலை – நான்காவது ஒருநாள் போட்டி
  • 21 ஜூலை – ஐந்தாவது ஒருநாள் போட்டி

துடுப்பாட்டத்தில் ஒரே தவறை செய்து வருகிறோம் – குல்படீன் நையிப் கவலை

டெஸ்ட் தொடருக்கான குழாமானது இரு குழாம்களாக பெயரிடப்பட்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகளுக்குமான அணித்தலைவராக மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் கார்லஸ் பரெத்வெயிட்டினுடைய சகோதரரான கிரேக் பரெத்வெயிட் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, இறுதி டெஸ்ட் போட்டிக்கான அணியின் தலைவராக 71 முதல்தர போட்டிகளில் 3587 ஓட்டங்களை குவித்துள்ள ஷமரஹ் ப்ரூக்ஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்திய அணியுடனான தொடர் ஆரம்பமாகவுள்ள காரணத்தினால் இந்திய A அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. முதல் போட்டியின் அணித்தலைவர் கிரேக் பரெத்வெயிட், ஜோன் கெம்பல், ஒருநாள் அணித்தலைவர் ரொஸ்டன் ச்சேஸ், ஷேன் டௌரிச் ஆகிய வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் தேசிய அணியுடன் இணையவுள்ளனர்.

முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குமான 13 பேர் அடங்கிய குழாம்

கிரேக் பரெத்வெயிட் (அணித்தலைவர்), ஜோன் கெம்பல், ரொஸ்டன் சேஸ், ரஹ்கீம் க்ரொன்வெல், ஷேன் டௌரிச், ஜொமெல் வரிக்கன், சுனில் அம்பிரிஸ், ஜெர்மைன் ப்லெக்வூட், ஷமரஹ் ப்ரூக்ஸ், மிக்கெல் கம்மிண்ஸ், சிமர் ஹோல்டர், செர்மன் லுவிஸ், ரைமொன் ரைபர்

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் அடங்கிய குழாம்

ஷமரஹ் ப்ரூக்ஸ் (அணித்தலைவர்), சுனில் அம்பிரிஸ், ஜெர்மைன் ப்லெக்வூட், மிக்கெல் கம்மிண்ஸ், சிமர் ஹோல்டர், செர்மன் லுவிஸ், ரைமொன் ரைபர், அகிம் ப்ராஸர், ஜஹ்மர் ஹமில்டொன், மென்ட்கின் ஹோஜ், பிரன்டொன் கிங், ஜெர்மி ஸொலொஸனோ, ஜொமெல் வெரிக்கன்   

டெஸ்ட் போட்டி அட்டவணை (அனைத்து போட்டிகளும் மேற்கிந்திய தீவுகள் நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது)

  • 24 – 27 ஜூலை – முதலாவது டெஸ்ட் போட்டி – என்டிகுவா
  • 31 ஜூலை – 3 ஆகஸ்ட் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – ட்ரினிடாட்
  • 6 – 9 ஆகஸ்ட் – மூன்றாவது டெஸ்ட் போட்டி – ட்ரினிடாட்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<