கிழக்கு மாகாண அணியின் சவாலை சமாளித்த ஊவா மாகாணம்

329
Under 23 provincial

கிழக்கு மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இடையிலான 23 வயதுக்கு உட்பட்ட இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் மாகாணங்களுக்கு இடையிலான போட்டித் தொடரின் லீக் போட்டி ஒன்றாகவே மாத்தறை, உயன்வத்தை மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை (20) ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி சன்ஜிக்க ரித்மவின் சதத்தின் மூலம் அதிக ஓட்டங்களைப் பெற்றது.

கிழக்கு மாகாண அணி முதல் நாளில் 73 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 384 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்தியது. கடைசிவரை களத்தில் இருந்த ரித்ம ஆட்டமிழக்காது 152 ஓட்டங்களை பெற்றார். சிறப்பாக ஆடிய ரமின்து நிகேஷல 10 ஓட்டங்களால் தனது சதத்தை தவறவிட்டார்.

ஊவா மாகாணம் சார்பில் ஹஷான் விமர்ஷன 61 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் போட்டியின் கடைசி நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஊவா மாகாண அணி ஆட்ட நேரம் முடியும்வரை தனது விக்கெட்டுகளை காத்து ஆட்டத்தை சமநிலையில் முடித்துக் கொண்டது.

ஆட்ட நேரம் முடியும்போது ஊவா அணி 69 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை பெற்றிருந்தது. அவ்வணி சார்பில் ஹர்ஷ ராஜபக்ஷ பெற்ற 43 ஓட்டங்கலே அதிகபட்சமாகும். கிழக்கு மாகாணத்தின் நிமேஷ் விமுக்தி மற்றும் கே. தனூஷன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

கிழக்கு மாகாணம் (முதல் இன்னிங்ஸ்): 384/9d – சன்ஜிக்க ரித்ம 152*, ரமிது நிகேஷல 90, சச்சின்த ஜயதிலக்க 32, பிரமுத் ஹெட்டிவத்த 32, ஹஷான் விமர்ஷன 5/61, ஹர்ஷ ராஜபக்ஷ 2/76

ஊவா மாகாணம் (முதல் இன்னிங்ஸ்): 193/9 (69) – ஹர்ஷ ராஜபக்ஷ 43, லிசுல லக்ஷான் 30, சமாஹி சப்தீன் 29, நிமேஷ் விமுக்தி 3/36, கே. தனூஷன் 3/32

போட்டி முடிவு போட்டி சமநிலையில் முடிவடைந்தது