கஜனின் சதத்தினால் அரையிறுதியில் யாழ் மத்திய கல்லூரி

494

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் 15 வயதிற்குட்பட்ட பிரிவு-III பாடசாலை அணிகளுக்கிடையிலான 2018 /19  பருவக்காலத்திக்கான கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியொன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நிறைவிற்கு வந்தது.

ஒரு நாளில் நான்கு இன்னிங்ஸ்களைக் கொண்ட இந்த போட்டியில் யாழ் மத்திய கல்லூரி மற்றும் வெயாங்கொட மாறப்பல மகா வித்தியாலய அணிகள் மோதியிருந்தன.

துடுப்பாட்டத்தில் தடுமாறிய சென். ஜோன்ஸ்; மத்தியை மீட்டெடுத்த மதுசன்

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையுடன்…

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மாறப்போல அணியினர் மத்திய கல்லூரியினை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தனர்

மத்திய கல்லூரியினர், அணியின் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரர் சான்சஜனின் விக்கெட் உள்ளடங்கலாகவிக்கெட்டுக்களை 35 ஓட்டங்களிற்கு இழந்தனர். நான்காவது விக்கெட்டிற்காக சாரங்கன், கஜன் இணை சத இணைப்பாட்டம் ஒன்றினை பெற்றுக்கொடுத்து அணியினை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.  143 ஓட்டங்களினை பெற்றிருந்த வேளையில் அணித்தலைவர் சாரங்கன் நான்காவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்

தொடர்ந்தும் கலத்திலிருந்த கஜன் 146 பந்துகளில் 15 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக சிறப்பான சதம் ஒன்றினை பெற்றுக்கொடுத்து 126 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கெளதம் மேலும் 37 ஓட்டங்களினை சேர்க்க 60.1 ஓவர்களினை எதிர்கொண்ட மத்திய கல்லூரி அணியினர் 240 ஓட்டங்களினை பெற்றிருந்த வேலையில் தமது ஆட்டத்தினை இடை நிறுத்தினர்.

பந்துவீச்சில் ஹிமேஷ் ஹன்ஸாஜித்விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

மெக்ராத்தை ஆச்சரியப்பட வைத்த விராட் கோஹ்லி

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்…

தொடர்ந்து முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த வெயாங்கொட தரப்பினரிற்கு முன்வரிசையில் நிமேஷ் மற்றும் பண்டார ஆகியோர் பெறுமதியான 30 ஓட்டங்களினை சேர்க்க வெறுமனே 2  விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 20 ஓவர்களில் அவ்வணியினர் 100 ஓட்டங்களினை கடந்தனர்

104 ஓட்டங்களினை பெற்றிருந்த வேளையில் மூன்றாவது விக்கெட்டாக பண்டாரவை கஜன் வெளியேற்ற, தொடர்ந்து வந்த வீரர்களை ஒற்றை இலக்கத்துடன் வெளியேற்றினர் மத்தியின் பந்துவீச்சாளர்கள்

135 ஓட்டங்களிற்குவிக்கெட்டுக்களினை இழந்திருந்தபோது லக்ஷிதா உதேஷ் அரைச்சதம் கடந்தார்

அவ்வணியின் இறுதி விக்கெட்டும் 155 ஓட்டங்களினை பெற்றிருந்த வேளையில் வீழ்த்தப்பட, முதலாவது இன்னிங்சில் முன்னிலைபெற்ற யாழ் மத்திய கல்லூரியினர் போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

யாழ் மத்திய கல்லூரி 240/7 (60.1) கஜன் 126, சாரங்கன் 47, கெளதம் 37,ஹிமேஷ் ஹன்சஜித் 3/62

மாரபொல மகா வித்தியாலயம் 155/10 (35.5) லக்ஷிதா உதேஷ் 58*, நிமேஷ் தக்ஷிண 38, சாயுன் பண்டார 37, கவிதர்சன் 3/34, விதுஷன் 2/21, சயந்தன் 2/28

போட்டி முடிவு – முதலாவது இன்னிங்ஸ் புள்ளிகளடிப்படையில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி