சகுந்த லியனகேவின் சகலதுறை ஆட்டத்தால் போட்டியை சமநிலையில் முடித்த வெஸ்லி

32

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 2017/2018 பருவகாலத்திற்கான 19 வயதின் கீழ் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் 2 போட்டிகள் இன்று (28) நிறைவுக்கு வந்தன.

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

நுவனிது பெர்னாண்டோ, பிரவீன் குரே மற்றும் மலிந்த பீரிஸ் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் வெஸ்லி கல்லூரி எதிராக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற புனித செபஸ்டியன் கல்லூரி, வெஸ்லி கல்லூரிக்கு எதிரான போட்டியை சமநிலையில் முடித்தது.

மொரட்டுவை டி சொய்ஸா மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித செபஸ்டியன் கல்லூரி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி வீரர்களுக்கு 193 ஓட்டங்களளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

பந்துவீச்சில் செபஸ்டியன் கல்லூரியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் வினுஜ ரணசிங்க 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

பந்துவீச்சாளர்களின் உதவியுடன் காலிறுதிக்குள் நுழைந்த மஹானாம கல்லூரி

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய செபஸ்டியன் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 154 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

பந்துவீச்சில் வெஸ்லி கல்லூரியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் சகுந்த லியனகே 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்)  – 351/6d (75) – நுவனிது பெர்னாண்டோ 89, பிரவீன் குரே 56*, மலிந்த பீரிஸ் 53, நிஷித அபிலாஷ் 46, தரூஷ பெர்னாண்டோ 44, சகுந்த லியனகே 2/83

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 193 (51.1)  – இசுரு சந்தீப 66, சகுந்த லியனகே 56, வினுஜ ரணசிங்க 4/31, ஜனிஷ்க பெரேரா 2/19, பிரவீன் ஜயவிக்ரம 2/30, தாஷிக் பெரேரா 2/31

புனித செபஸ்டியன் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 154 (42.1) – தரூஷ பெர்னாண்டோ 36, ஜனிஷ்க பெரேரா 31, தாஷிக் பெரேரா 21, சகுந்த லியனகே 6/47

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.  


புனித செபஸ்டியன் கல்லூரி, கட்டுனேரிய எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை

புனித செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய செபஸ்டியன் கல்லூரி வீரர்கள் 309 ஓட்டங்களை முதல் இன்னிங்சில் குவித்து தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர். அவ்வணிக்காக அயோன் ஹேஷர 111 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்து வலுச்சேர்த்தார்.

பந்துவீச்சில் புனித அந்தோனியார் கல்லூரியின் கவிந்து மதுக 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.

திசர பெரேராவின் அதிரடி ஆட்டத்தால் முதல் வெற்றியை சுவைத்த SSC

இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய புனித அந்தோனியார் கல்லூரி வீரர்களுக்கு 145 ஓட்டங்களளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதன்படி பலோவ் ஒன் (Follow-on) முறையில் இரண்டாம் இன்னிங்சில் மீண்டும் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்ட அந்தோனியர் கல்லூரியினர் 155  ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 309/9d (74.1) – அயோன் ஹேஷர 111, உதார மெண்டிஸ் 37, கவிந்து இரோஷ் 36, சமித டில்ஷான் 31, கவிந்து மதுக 5/87, சசங்க லஹிரு 2/47, கவீஷ துலன்ஜன 2/61

புனித அந்தோனியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 145 (58.4) – விஷால் சில்வா 45, ஜொயெல் பின்டோ 25, நிஷான் பிரமோத் 4/40, சிதும் அகிலங்க 3/25, ஷெசான் உதார 2/25

புனித அந்தோனியர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 155/7 (54) – அவிஷ்க மெவான் 55*, அவிஷ்க தரிந்து 42, டிஷான் பிரமோத் 5/69

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.