முழங்கால் உபாதை: BBL15 தொடரில் இருந்து அஷ்வின் விலகல்!

0
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, பிக் பேஷ் லீக் (BBL) T20  தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேற்கிந்திய தீவுகள் T20 தொடரில் இருந்து டிம் செய்பார்ட் நீக்கம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருந்த 37 வயதான ரவிச்சந்திரன் அஷ்வின், முதன் முறையாக அவுஸ்திரேலியாவின் உள்ளூர் T20 லீக் போட்டித் தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 15 பருவத்திற்காக சிட்னி தண்டர் அணிக்காக ஒப்பந்தமாகியிருந்தார். எனினும் அவருக்கு ஏற்பட்ட முழங்கால் உபாதை அவரது கன்னி BBL தொடர் வாய்ப்பினை இல்லாமல் செய்துள்ளது.  இது குறித்து BBL தொடரில் அஷ்வினை ஒப்பந்தம் செய்திருந்த சிட்னி தண்டர்  அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஷ்வின் விலகியது தண்டர் அணிக்கு (Thunder Nation) பெரும் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளது.  அதன்படி சிட்னி தண்டர் அணியின் பொது முகாமையாளர் ட்ரெண்ட் கோப்லாண்ட் அஷ்வினின் உபாதை குறித்துப் பேசுகையில், "அஷ்வினின் காயம் குறித்த செய்தி கேட்டு சிட்னி தண்டரில் உள்ள அனைவரும் மிகவும் வருத்தமடைந்தோம். அவர் விரைந்து குணமடைய பிரார்த்திக்கின்றோம். அஷ்வினுடன் நாங்கள் பேசிய முதல் தருணத்திலிருந்தே, எங்கள் அணியின் மீதான அவரது அர்ப்பணிப்பு தெளிவாக இருந்தது. அவரது உடல்நலனைப் பொறுத்து, BBL தொடரின் பிந்தைய பகுதியில் அவரை எங்கள் அணியுடன் சேர்த்து, ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தவும், அவரிடம் ஒரு நீண்ட கால உறவை உருவாக்கவும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்." என்று தெரிவித்தார்.  அதேவேளே அஷ்வினும், BBL தொடரில்...

பங்களாதேஷ் துடுப்பாட்டப் பயிற்சியாளராக அஷ்ரபுல் நியமனம்

0
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்டவீரருமான மொஹமட் அஷ்ரபுல், அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்களாதேஷ் தேசிய...

மேற்கிந்திய தீவுகள் T20 தொடரில் இருந்து டிம் செய்பார்ட் நீக்கம்

0
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில்  இருந்து விக்கெட்காப்புத் துடுப்பாட்ட வீரரான டிம் செய்பார்ட் விரல் உபாதை காரணமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆஷஸ் தொடருக்காக ட்ராவிஸ் ஹெட் T20 அணியில் இருந்து...

ஆஷஸ் தொடருக்காக ட்ராவிஸ் ஹெட் T20 அணியில் இருந்து விடுவிப்பு

0
இந்தியாவுக்கு எதிரான T20 தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவுஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க துடுப்பாட்ட வீரரான ட்ராவிஸ் ஹெட் விடுவிக்கப்பட்டுள்ளார். >>ஐசிசி...

ஐசிசி மகளிர் உலகக்கிண்ணத்தை வென்றது இந்திய அணி

0
இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இந்திய மகளிர் அணி முதன்முறையாக சம்பியனாக மகுடம் சூடியது.  மும்பை - டிவை பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் முதன்முறையாக தகுதிபெற்றிருந்தன. ரைசிங் ஸ்டார்ஸ்...

ரைசிங் ஸ்டார்ஸ் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

0
ஆசிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் ரைசிங் ஸ்டார்ஸ்  T20 தொடர் அடுத்த மாதம் 14ஆம் திகதி கட்டார் டோஹாவில் நடைபெறவுள்ளதாக...

கொல்கத்தா அணியின் புதிய பயிற்றுவிப்பாளராகும் நாயர்

0
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா...

MI எமிரேட்ஸ் அணியில் பொல்லார்ட் மற்றும் பூரன் இணைப்பு

0
சர்வதேச லீக் T20 (ILT20) தொடரின் முன்னாள் சம்பியன்களில் ஒன்றான MI எமிரேட்ஸ் அணி, புதிய பருவத்திற்கான தொடரில் தமது...

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ரோஹித் சர்மாவுக்கு முதலிடம்

0
சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிதாக அறிவித்துள்ள ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்திய அணியின் ரோஹித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார். ரோஹித்...

அதிகமாக வாசிக்கப்பட்டது

வீடியோ