மெஸ்ஸியை முந்திய இந்திய வீரர் சுனில் செத்ரி

407

தற்போது கால்பந்து ஆடிவரும் வீரர்களில் அதிக சர்வதேச கோல்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் நட்சத்திர வீரர் லியொனல் மெஸ்ஸியை பின்தள்ளி யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய கால்பந்து அணியின் நட்சத்திரம் சுனில் செத்ரி இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

குளோப் கால்பந்து விருதை வென்று புதிய மைல்கல்லை எட்டிய ரொனால்டோ

ஐரோப்பிய கால்பந்து …

இதன்படி, சர்வதேச நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு இடையிலே செத்ரி இடம்பெற்றுள்ளார். இந்த வரிசையில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கால்பந்து போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் செத்ரி இரண்டு கோல்களை பெற்றதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 67 கோல்களை பதிவு செய்துள்ளார்.  

இதன்மூலம், சர்வதேச போட்டிகளில் 65 கோல்களை பெற்றிருக்கும் மெஸ்ஸியை அவர் பின் தள்ளியுள்ளார். இந்த வரிசையில் முதலிடத்தில் இருக்கும் போர்த்துக்கல் முன்கள வீரர் ரொனால்டோ மொத்தம் 85 சர்வதேச கோல்களை பெற்றுள்ளார்.

இந்திய அணி தாய்லாந்துடனான போட்டியை வென்றதானது, ஆசிய கிண்ணத் தொடரில் அந்த அணி 55 ஆண்டுகளில் பெற்ற முதல் வெற்றியாக சாதனை பதிவாக மாறியுள்ளது.  

2018 கால்பந்து உலகம் – ஒரு கண்ணோட்டம்

உயர்ந்துவரும் பந்தை தடுக்கும் முயற்சியாகவே மரியோ மண்ட்சுகிக் உயரப் ….

தற்பொழுது 34 வயதையுடைய செத்ரி இந்திய கால்பந்தில் சச்சின் டெண்டுல்கர் போன்றவராவார். கழக மட்டத்தில் பெங்களூரு அணிக்காக விளையாடும் அவர் அற்புதத் தலைவர் என்று பெயர் பெற்றவராவார். அவர் நீண்ட காலமாக இந்திய கால்பந்து நட்சத்திரமாகவும் இருந்து வருகிறார்.  

அவர் 2005 ஆம் ஆண்டு போட்ட முதலாவது சர்வதேச கோல் வரலாறு படைப்பதாக இருந்தது. அது இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது கால்பந்து தொடராக இருந்தது.

அண்மைய வரலாற்றில் இந்திய கால்பந்து அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியான, 2008ஆம் ஆண்டு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சவால் கிண்ணத்தைக் கைப்பற்றியதிலும் செத்ரி முக்கிய பங்கு வகித்தவராவார். அவர் குறித்த தொடரில் நான்கு கோல்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.     

இதுவரை 105 சர்வதேசப் போட்டிகளில் ஆடியிருக்கும் செத்ரி, போட்டி ஒன்றில் சராசரியாக 0.63 என்ற அடிப்படையில் கோல் பெற்றுள்ளார். உள்ளூர் போட்டிகளில் அவரது கோல் பெறும் சராசரி இதனை விட குறைவாகும். அந்தப் போட்டிகளில் அவர் சராசரியாக இரண்டு போட்டிகளில் ஒரு கோல் என்ற வீதத்தில் பெற்றுள்ளார்.    

கொழும்பு மற்றும் ரினௌன் கழகங்கள் மீது பக்கீர் அலி அதிருப்தி

இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட தேசிய கால்பந்து அணித் தேர்வு …

எனினும், இந்த சாதனையை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று செத்ரி குறிப்பிட்டுள்ளார். நான் இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதாவது, எப்படி இருந்தாலும் என்னையும் லியொனல் மெஸ்ஸி அல்லது ரொனால்டோவையும் ஒப்பிட முடியாது.

என்றாலும், இதனை மிக மிக கௌரவமாகக் கருதுகிறேன். எனது நாட்டுக்காக நான் பெற்ற கோல்களுக்கு அங்கீகாரமாக இதனை நான் எடுத்துக் கொள்ளவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனது நாட்டுக்காக கோல் பெற என்னாலான எல்லா முயற்சிகளையும் செய்வேன் என்று அவர் குறிப்பிட்டார்.     

செத்ரி தற்போது கால்பந்து ஆடுபவர்களில் மாத்திரமன்றி அனைத்து காலங்களுக்குமான சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் பெற்றவர் வரிசையிலும் 17 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். மெஸ்ஸி மாத்திரமன்றி ஐவொரி கொஸ்ட் முன்கள வீரர் டிடியர் ட்ரொக்பா, பிரேசிலின் ரொனால்டோ மற்றும் நெய்மார் மற்றும் சுவீடனின் ஸ்லாடன் இப்ராஹிமொவிக் போன்ற நட்சத்திர வீரர்களையும் செத்ரி பின்தள்ளி உள்ளமை மற்றொரு சிறப்பம்சமாகும்.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<