Home Tamil சந்துஷின் அபார சதத்துடன் புனிதர்கள் சமரை சமநிலை செய்த புனித பேதுரு கல்லூரி

சந்துஷின் அபார சதத்துடன் புனிதர்கள் சமரை சமநிலை செய்த புனித பேதுரு கல்லூரி

173

இன்று (2) 85ஆவது தடவையாக நடைபெற்று முடிந்திருக்கும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி அணிகள் இடையிலான புனிதர்களின் கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

கிரிக்கெட்டின் பித்துக்காலமான மார்ச் மாதத்தை அலங்கரிக்கும் இந்த கிரிக்கெட் பெரும் போட்டி நேற்று (1) கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகியது. இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித ஜோசப் கல்லூரி அணித்தலைவர் அஷைன் டேனியல் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை புனித பேதுரு கல்லூரி அணிக்காக வழங்கினார்.

புனிதர்களின் சமரின் முதல் நாளில் புனித ஜோசப் கல்லூரி ஆதிக்கம்

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும்…

இதன்படி முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த புனித பேதுரு கல்லூரி அணி, தமது முதல் இன்னிங்ஸில் சகலதுறை வீரர் சந்துஷ் குணத்திலக்கவின்  72 ஓட்டங்களின் துணையோடும், தினித் அஞ்சுலவின் 41 ஓட்டங்களின் துணையோடும் 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதேவேளை, கொழும்பு ஜோசப் கல்லூரியின் பந்துவீச்சில் அதன் அணித்தலைவர் அஷைன் டேனியல் 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணி போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 189 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் காணப்பட்டிருந்தது. களத்தில் தினேத் ஜயக்கொடி 62 ஓட்டங்களுடனும், திலேஷ் பெரேரா 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தனர்.

இன்று (2) போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணி, 60 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

Photos: St. Joseph’s College vs St. Peter’s College | 85th Battle of the Saints | Day 2

ThePapare.com | Hiran Weerakkody | 02/03/2019 Editing and re-using images without permission of ThePapare.com…

புனித ஜோசப் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் தினேத் ஜயக்கொடி 6 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 77 ஓட்டங்களையும், திலேஷ் பெரேரா 4 பெளண்டரிகள் அடங்கலாக  66 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

இதேநேரம், கொழும்பு புனித பேதுரு கல்லூரி அணியின் பந்துவீச்சில் தாரிக் சபூர் மற்றும் கனிஷ்க மதுவந்த ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

தொடர்ந்து 67 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை கொழும்பு பேதுரு கல்லூரி அணி ஆரம்பித்தது.

கொழும்பு ஜோசப் கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் பந்துவீச்சு அதிரடியாக இருந்ததன் காரணமாக ஆரம்பத்தில் இருந்தே தடுமாற தொடங்கிய புனித பேதுரு கல்லூரி அணி ஒரு கட்டத்தில் 106 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து இக்கட்டான நிலை ஒன்றினை நோக்கி சென்றிருந்தது.

எனினும், புனித பேதுரு கல்லூரி அணியின் முதல் இன்னிங்ஸில் 72 ஓட்டங்களை விளாசியிருந்த அனுபவ வீரர் சந்துஷ் குணத்திலக்க, பந்துவீச்சில் முன்னதாக ஜொலித்த கனிஷ்க மதுவந்தவுடன் இணைந்து போராட்ட இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கினார்.

இந்த இணைப்பாட்டம் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் வரை நீடிக்க, போட்டி சமநிலை அடைந்தது.

அதன்படி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது கொழும்பு புனித பேதுரு கல்லூரி அணி தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக 317 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து புனித ஜோசப் கல்லூரியினை விட 250 ஓட்டங்களால் முன்னிலை பெற்று காணப்பட்டிருந்தது.

புனித பேதுரு கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் 7ஆம் விக்கெட்டுகாக 206 ஓட்டங்கள் வரையில் பகிர்ந்து புனிதர்கள் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில், 7ஆம் விக்கெட்டுகாக பெறப்பட்ட சாதனை இணைப்பாட்டம் ஒன்றை பதிவு செய்த சந்துஷ் குணத்திலக்க சதம் ஒன்று தாண்டி 161 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்க, கனிஷ்க மதுவந்த அரைச்சதம் ஒன்றுடன் 89 ஓட்டங்களுடன் இருந்தார்.

இதேநேரம், கொழும்பு ஜோசப் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக அதன் தலைவர் அஷைன் டேனியல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி எதிரணிக்கு அழுத்தம் தந்திருந்த போதிலும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

இந்த ஆண்டிற்கான புனிதர்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்த காரணத்தினால், 2016ஆம் ஆண்டில் கடைசியாக இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் வெற்றி பெற்ற புனித பேதுரு கல்லூரி அணி கிண்ணத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்கின்றது.

ஸ்கோர் விபரம்

Result

Match drawn

St. Peter’s College
219/10 (60) & 317/6 (79)

St. Joseph’s College
286/8 (60)

Batsmen R B 4s 6s SR
Banuka de Silva lbw b Ashan De Alwis 5 21 0 0 23.81
Dinith Anjula c Miranga Wickramage b Dunith Wellalage 41 74 4 2 55.41
Santhush Gunathilake c Dilesh Perera b Ashen Daniel 72 105 6 0 68.57
Ranmith Jayasena b Shalinda Senevirathne 21 27 1 0 77.78
Nipunaka Fonseka lbw b Ashen Daniel 21 63 1 0 33.33
Shivan Perera c Sachintha Ravindu b Ashen Daniel 9 13 1 0 69.23
Shannon Fernando c Shevon Fonseka b Shalinda Senevirathne 0 4 0 0 0.00
Kanishka Maduwantha c Shevon Fonseka b Lakshan Gamage 10 18 0 0 55.56
Wanuja Sahan run out (Lakshan Gamage) 26 28 1 0 92.86
Ruwin Senevirathne b Lakshan Gamage 0 2 0 0 0.00
Tariq Saboor not out 1 6 0 0 16.67


Extras 13 (b 7 , lb 3 , nb 1, w 2, pen 0)
Total 219/10 (60 Overs, RR: 3.65)
Bowling O M R W Econ
Lakshan Gamage 10 1 38 2 3.80
Ashan De Alwis 7 0 20 1 2.86
Shalinda Senevirathne 13 2 43 2 3.31
Johanne De Zilva 4 2 8 0 2.00
Ashen Daniel 15 1 58 3 3.87
Dunith Wellalage 11 1 43 1 3.91
Batsmen R B 4s 6s SR
Shevon Fonseka c Nipunaka Fonseka b Ranmith Jayasena 37 69 4 0 53.62
Johanne De Zilva c Santhush Gunathilake b Kanishka Maduwantha 45 56 4 1 80.36
Shevon Daniel lbw b Kanishka Maduwantha 0 2 0 0 0.00
Dineth Jayakody b Shivan Perera 77 110 6 2 70.00
Dilesh Perera c Shivan Perera b Tariq Saboor 62 80 4 0 77.50
Lakshan Gamage b Tariq Saboor 1 2 0 0 50.00
Sachintha Ravindu c Wanuja Sahan b Ranmith Jayasena 22 15 0 0 146.67
Dunith Wellalage c Nipunaka Fonseka b Santhush Gunathilake 19 15 0 0 126.67
Ashen Daniel not out 5 6 0 0 83.33
Shalinda Senevirathne not out 9 9 0 0 100.00


Extras 9 (b 0 , lb 4 , nb 4, w 1, pen 0)
Total 286/8 (60 Overs, RR: 4.77)
Bowling O M R W Econ
Tariq Saboor 11 0 51 2 4.64
Santhush Gunathilake 12 1 56 1 4.67
Wanuja Sahan 6 0 27 0 4.50
Shivan Perera 4 1 23 1 5.75
Kanishka Maduwantha 12 1 51 2 4.25
Ruwin Senevirathne 8 0 41 0 5.12
Ranmith Jayasena 7 0 33 2 4.71


Batsmen R B 4s 6s SR
Banuka de Silva c Dunith Wellalage b Ashan De Alwis 4 11 0 0 36.36
Dinith Anjula c Johanne De Zilva b Ashen Daniel 6 22 0 0 27.27
Santhush Gunathilake not out 161 190 11 0 84.74
Shannon Fernando c & b Shalinda Senevirathne 25 47 3 0 53.19
Ranmith Jayasena st Sheran Fonseka b Ashen Daniel 3 13 0 0 23.08
Nipunaka Fonseka b Lakshan Gamage 11 39 1 0 28.21
Shivan Perera run out (Dunith Wellalage) 12 16 2 0 75.00
Kanishka Maduwantha not out 89 138 7 0 64.49


Extras 6 (b 3 , lb 0 , nb 2, w 1, pen 0)
Total 317/6 (79 Overs, RR: 4.01)
Bowling O M R W Econ
Lakshan Gamage 8 0 22 1 2.75
Ashan De Alwis 7 0 36 1 5.14
Ashen Daniel 23 2 65 2 2.83
Dunith Wellalage 14 1 59 0 4.21
Shalinda Senevirathne 18 1 66 1 3.67
Johanne De Zilva 7 0 58 0 8.29
Shevon Daniel 2 0 8 0 4.00



முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.