இரண்டாவது பருவகாலத்திற்குரிய LPL தொடரின் திகதிகள் அறிவிப்பு

90

இரண்டாவது பருவகாலத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் போட்டிகள், ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உறுதி செய்திருக்கின்றது. 

கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்ற இந்த LPL தொடர், இந்த ஆண்டில்  அதன் இரண்டாவது பருவகாலத்திற்கு அடியெடுத்து வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக தொடர் பிற்போடப்படும் என தகவல்கள் வெளியாகின.   

கொவிட்-19 தொற்று காரணமாக பிற்போடப்படவுள்ள LPL தொடர்

எனினும், தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் குறித்த தொடர் ஜூலை மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரையில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

இதேவேளை, இந்த ஆண்டுக்கான இரண்டாவது பருவகால LPL தொடரும் கடந்த ஆண்டு போன்று உயிர் பாதுகாப்பு வலயத்திற்குள் இரசிகர்கள் எவருமின்றி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

உலகக் கிண்ணத்திற்காக 14 அணிகளை தெரிவு செய்யவுள்ள ICC

கடந்த ஆண்டு ஐந்து அணிகள் பங்கேற்ற LPL தொடரின் முதல் பருவகால போட்டிகளில் சம்பியன் கிண்ணத்தை ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றி கொண்டதுடன், போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், உயிரியல் பாதுகாப்பு வலயத்திற்குள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<