ஷாமிந்த எறங்கவின் பந்துவீச்சு நடையில் சந்தேகம்

1078
Shaminda Eranga

29 வயதான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாமிந்த எறங்கவின் பந்துவீச்சு நடையில் சந்தேகம் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை  மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று டர்ஹம் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்று முடிவடைந்த 2வது டெஸ்ட் போட்டியின் பின்னரே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் அதிகாரிகள் குழு இந்த அறிக்கையை இலங்கை கிரிக்கட் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் எறங்க இன்னும் 14 தினங்களில் இது தொடர்பான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அத்தோடு அந்தப் பரிசோதனை முடிவு வரும் வரையில் அவருக்கு சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்