மெதிவ்ஸின் மீள்வருகைக்காக காத்திருக்கும் தெரிவுக் குழு உறுப்பினர்கள்

1322

உபாதைக்குள்ளான இலங்கை அணி வீரர்களான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மன்த சமீர மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தற்பொழுது நடைபெற்றவருகின்ற உள்ளூர் கழகங்களுக்கிடையிலான T-20 தொடரில் மீண்டும் களமிறங்கியுள்ளனர்.

[rev_slider LOLC]

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவினர், உபாதைக்குள்ளாகியுள்ள இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளின் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸின் உடல் தகுதியை எதிர்பார்த்த நிலையில் உள்ளனர்.  

எனினும், மெதிவ்ஸின் தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி முழுமையாக குணமடையவில்லை என்பதால் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் ஊடாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுதந்திர கிண்ண தொடரில் இருந்தும் விலகும் அசேல குணரத்ன

அண்மையில் நிறைவுற்ற பங்களாதேஷ் நாட்டுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின்போது…

கடந்த வாரம் ஆரம்பமான உள்ளூர் கழகங்களுக்கிடையிலான T-20 தொடரில் குசல் ஜனித் பெரேரா, துஷ்மன்த சமீர மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தத்தமது கழகங்களுக்காக விளையாடி இருந்தமையைக் காணமுடிந்தது.

ஆனாலும், இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கொழும்பு கோல்ட் கழகத்துக்காக அவர் இதுவரை எந்தவொரு போட்டியிலும் களமிறங்கவில்லை.

இதேநேரம், குறித்த நான்கு வீரர்களினதும் உடற்தகுதி தொடர்பில் முன்னெடுக்கவுள்ள இறுதி பரிசோதனை நாளைய தினம்(27) இடம்பெறவுள்ளது. ஏற்கனவே களமிறங்கிய குசல், துஷ்மன்த மற்றும் நுவன் பிரதீப் ஆகியோரின் உடற்தகுதி தொடர்பில் தெரிவுக்குழுவினர் திருப்தி கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் குறித்த பரிசோதனையில் தேறுவாரா என்ற சந்தேகமும் தெரிவிக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது உபாதைக்குள்ளாகியிருந்த இலங்கை அணியின் சகலதுறை அதிரடித் துடுப்பாட்ட வீரரான அசேல குணரத்ன மற்றும் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஷெஹான் மதுஷங்க ஆகியோர் சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடரில் விளையாடும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டனர்.

முக்கியமான பலர் இன்றி இலங்கை வரும் இந்திய குழாம் அறிவிப்பு

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கையில் ஆரம்பமாகும் சுதந்திர கிண்ண T-20 முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இளம் வீரர்களைக் கொண்ட…

இதில் தற்போது இடம்பெற்று வருகின்ற உள்ளூர் T-20 போட்டிகளில் என்.சி.சி அணிக்காக விளையாடி வருகின்ற லசித் மாலிங்க, பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், கடந்த சனிக்கிழமை களுத்துறை நகர அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

அதேபோல, குறித்த இரண்டு போட்டிகளிலும் என்.சி.சி அணி வெற்றியைப் பதிவுசெய்ததுடன், அவ்வணிக்காக விளையாடி வருகின்ற நிரோஷன் திக்வெல்ல, தினேஷ் சந்திமால் மற்றும் உபுல் தரங்க ஆகியோரும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதில் நீண்ட காலமாக முழங்கால் உபாதைக்கு முகங்கொடுத்து வந்த லசித் மாலிங்க, கடந்த வருடம் மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார். எனினும், அவரால் வழமையான திறமைகளை வெளிப்படுத்தி விக்கெட்டுக்களை கைப்பற்ற முடியாமல் போனதால் அணியிலிருந்து அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இதனால் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுடனான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பையும் அவர் இழந்தார்.  

சமிந்த வாஸிடமிருந்து இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர கிண்ண முத்தரப்பு டி20 தொடர்…

இந்நிலையில், லசித் மாலிங்க மீண்டும் அணிக்குள் இடம்பெறுவதற்கான இறுதித் தீர்மானம் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹத்துருசிங்கவின் கைகளில் தங்கியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், துஷ்மன்த சமீர மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் மீண்டும் உள்ளூர் போட்டிகளுக்கு திரும்பியுள்ளதால் சுதந்திர கிண்ண T-20 தொடரில் மாலிங்கவின் பங்குபற்றலானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முத்தரப்பு T-20 தொடர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. முதல் சுற்றின் முடிவில் முதலிரு இடங்களை பிடிக்கும் அணிகள் மார்ச் 18ஆம் திகதி இடம்பெறும் இறுதிப் போட்டியில் ஆடும்.

இதேநேரம் முத்தரப்பு T-20 தொடருக்கு ஆயத்தமாகும் நோக்கில் இலங்கை அணி மேற்கொள்ளவுள்ள ஒரு வாரகால விசேட பயிற்சி முகாம் எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.